யுஎன்டிபியின் ஆசிய- பசுபிக் பிராந்திய பணிப்பாளராக இலங்கைத் தமிழ்ப் பெண்
இலங்கைத் தமிழ்ப் பெண்ணான, கன்னி விக்னராஜா ஐ.நா அபிவிருத்தித் திட்டத்தின் (யுஎன்டிபி) ஆசிய -பசுபிக் பிராந்தியத்துக்கான பணிப்பாளராக நாளை டிசெம்பர் 1ஆம் நாள் பதவியேற்கவுள்ளார்.
முன்னதாக இவரை ஐ.நா பொதுச்செயலர் அன்ரனியோ குரெரெஸ், ஐ.நா அபிவிருத்தித் திட்டத்துக்கான உதவி செயலாளர் நாயகமாகவும், உதவி நிர்வாகியாகவும் நியமித்திருந்தார்.
கன்னி விக்னராஜா ஐ.நா முறைமைகளில் அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பான நீண்டகால அனுபவம் கொண்டவராவார்.
இவர் யுஎன்டிபியின் நாடு, பிராந்திய மற்றும் அனைத்துலக அளவில் ஆசிய மற்றும் ஆபிரிக்க கண்டங்களில் பணியாற்றியுள்ளார்.
சிறிலங்காவில் பிறந்த கன்னி விக்னராஜா பிறின்ஸ்ரென் பல்கலைக்கழகத்தில் பொது நிர்வாகத்துறையில் முதுமாணி பட்டம் பெற்றவர். அமெரிக்காவின் Bryn Mawr கல்லுரியில் பொருளாதாரத் துறையில் இளமாணி பட்டம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.