நிதியமைச்சர் பதவியில் இருந்து விலகினார் மங்கள
சிறிலங்கா நிதி அமைச்சர் மங்கள சமரவீரவும் பதவியில் இருந்து விலகியுள்ளார் எனவும், பதவி விலகல் கடிதத்தை சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் சிறிலங்கா அதிபருக்கு அனுப்பியுள்ளார் என்றும் கூறப்படுகிறது.
சஜித் பிரேமதாச அதிபர் தேர்தலில் தோல்வியடைந்ததை அடுத்தே அவர் இந்த முடிவை எடுத்துள்ளார் என கூறப்படுகிறது.
எனினும் இதுதொடர்பான அதிகாரபூர்வ தகவல் இன்னமும் வெளியாகவில்லை.
அதேவேளை மங்கள சமரவீர தனது கீச்சகத்தில் வெளியிட்டுள்ள பதிவு ஒன்றில், “ என் அன்புக்குரிய நாட்டிற்காக நான் அழுகிறேன். இரட்டை இரத்தினங்களான புத்தர் மற்றும், தர்மத்தின் ஆசீர்வாதமும் சிறிலங்காவுக்கு இருக்கட்டும்.” என்று கூறியுள்ளார்.