ஐஎஸ் தலைவர் கொல்லப்பட்டதற்கு ரணில் மகிழ்ச்சி
ஐஎஸ் அமைப்பின் தலைவர் அபு பக்கர் அல் பக்தாதி அமெரிக்க படைகளால் கொல்லப்பட்டது குறித்து, சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க தனது மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார்.
ஐ.எஸ் தலைவர் பக்தாதி கொல்லப்பட்டதை நேற்று அமெரிக்கஅதிபர் டிரம்ப் உறுதிப்படுத்திய சற்று நேரத்தில், சிறிலங்கா பிரதமர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.
உலகளாவிய பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கான முயற்சிகளுக்காக, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் அமெரிக்க படையினருக்கு தனது நன்றியைத் தெரிவிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.