மேலும்

‘திரும்பி வரமாட்டேன்’ – சகோதரனுக்கு கடிதம் எழுதிய குண்டுதாரி அலாவுதீன்

கொச்சிக்கடை அந்தோனியார் தேவாலயத்தில் கடந்த ஏப்ரல் 21ஆம் நாள் குண்டுத் தாக்குதலை நடத்திய தற்கொலைக் குண்டுதாரியின் உடற்கூற்றாய்வு அறிக்கை நேற்று கொழும்பு பிரதம நீதிவான் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது.

இதன்போது தற்கொலைக் குண்டுதாரியான, அகமட் முகத் அலாவுதீனின் தயாரான,  வகீர் மொகமட் பல்கீஸ் நீதிமன்றத்தில் முன்னிலையாகி, சாட்சியம் அளித்தார்.

தனது கணவனும் மகனும் வேலையை இழந்த பின்னர், தனது குடும்பத்தை, அலாவுதீனும் அவரது குடும்பத்தினருமே கவனித்துக் கொண்டனர் என்று கூறினார். தனது மகனான குண்டுதாரி அலாவுதீனை  அவர் அடையாளம்காட்டினார்.

சட்டமருத்துவ அதிகாரி உடற்கூற்றாய்வு அறிக்கையை சமர்ப்பித்ததுடன், பெற்றோரினது மரபணுவுடன், குண்டுதாரியின் மரபணு பொருந்துவதாகவும் அறிக்கையை சமர்ப்பித்தார்.

மட்டக்குளியை சேர்ந்த அகமட் லெப்பை அலாவுதீன், சட்டக் கல்லுலூரியில் சட்டம் பயின்றார் என்றும், சாய்ந்தமருதுவைச் சேர்ந்த சபீனா சேனுல் ஆப்தீனை திருமணம் செய்திருந்தார் என்றும் அவரது தந்தையாரும் நீதிமன்றில் சாட்சியம் அளித்தார்.

அவர், குண்டுவெடிப்பில் துண்டிக்கப்பட்ட அலாவுதீனின் தலையை தனது மகன் தான் என்று அடையாளம் காட்டியிருந்தார்.

தாக்குதலுக்கு முன்னதாக தனது சகோதரனுக்கு எழுதியுள்ள கடிதம் ஒன்றில், தான் திரும்பி வரப் போவதில்லை என்றும் பெற்றோரை கவனமாக பார்த்துக் கொள்ளும்படியும் அலாவுதீன் குறிப்பிட்டிருந்தார்என, அவரது மைத்துனர் சாட்சியம் அளித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *