மேலும்

சீன போர்க்கப்பலை பொறுப்பேற்க 110 சிறிலங்கா கடற்படையினர் பீஜிங் பயணம்

சிறிலங்கா கடற்படைக்கு சீனா வழங்கவுள்ள போர்க்கப்பலில் பணியாற்றுவதற்கான சிறப்புப் பயிற்சிகளைப் பெற்றுக் கொள்வதற்காக, 110 சிறிலங்கா கடற்படையினர் சீனாவுக்கு அனுப்பப்படவுள்ளனர்.

இந்த மாத இறுதிக்குள் இவர்கள் சீனாவுக்குப் புறப்படவுள்ளதாக, சிறிலங்கா கடற்படை தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டு இறுதிக்குள் சிறிலங்கா கடற்படையிடம், இந்தப் போர்க்கப்பல் கையளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

18 அதிகாரிகள் மற்றும் 92 கடற்படையினர் இந்தக் கப்பலைப் பொறுப்பேற்று சிறிலங்காவுக்குக் கொண்டு வரவுள்ளனர்.

சீன மக்கள் விடுதலை இராணுவத்தின் கடற்படையில், 2015ஆம் ஆண்டு வரை, ‘Tongling’ என்ற பெயருடன் இணைத்துக் கொள்ளப்பட்டிருந்த, ‘Jangwei I’ வகை ஏவுகணைப் போர்க்கப்பலே சிறிலங்கா கடற்படைக்கு வழங்கப்படவுள்ளது.

இந்தக் கப்பல் P625 என்ற புதிய இலக்கத்துடன், கடல் சோதனையோட்டங்களில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *