மேலும்

கூட்டுப் பயிற்சிக்காக 4 அவுஸ்ரேலிய போர்க்கப்பல்கள் சிறிலங்கா வருகை

சிறிலங்கா கடற்படையுடன் இணைந்து கூட்டுப் பயிற்சிகளை மேற்கொள்வதற்காக, அவுஸ்ரேலிய கடற்படையின் நான்கு பாரிய போர்க்கப்பல்கள் சிறிலங்காவுக்கு வந்துள்ளன.

Indo-Pacific Endeavour 2019 திட்டத்தின் கீழ், சிறிலங்கா உள்ளிட்ட நாடுகளுடன் அவுஸ்ரேலிய கடற்படை கூட்டுப் பயிறிகள் ஆரம்பித்துள்ளது.

முதற்கட்டமாக நேற்று முன்தினம் சிறிலங்கா வந்த அவுஸ்ரேலிய போர்க்கப்பல்கள் 30 ஆம் நாள் வரை இங்கு தரித்து நின்று சிறிலங்கா கடற்படையினருடன் கூட்டுப் பயிற்சிகளில் பங்கேற்கவுள்ளனர்.

இதற்கமைய, HMAS  Canberra மற்றும் HMAS Newcastle ஆகியன, கொழும்புத் துறைமுகத்துக்கும், HMAS Success மற்றும், HMAS Parramatta ஆகியன திருகோணமலை துறைமுகத்துக்கும் வந்துள்ளன.

இவற்றில் இரண்டு போர்க்கப்பல்கள் 27ஆம் நாளும், ஏனைய இரண்டு கப்பல்கள் மார்ச் 30ஆம் நாளும் இந்தியாவுக்குப் புறப்பட்டுச் செல்லவுள்ளன.

கொழும்பு துறைமுகம் வந்துள்ள HMAS Canberra ஹெலிகொப்டர் தாங்கி கப்பல் ஆகும். இந்தப் போர்க்கப்பல்களில் 1000 வரையிலான அவுஸ்ரேலியப் படையினர் சிறிலங்கா வந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *