மேலும்

இன்னொரு இரத்தக் களரிக்கே வழிவகுக்கும் – எச்சரிக்கிறார் மகிந்த

வடக்கிலுள்ள சில அரசியல்வாதிகளின் செயல்கள் மற்றும் கருத்துக்கள், இன்னொரு இரத்தக் களரிக்கே வழிவகுக்கும் என்று எச்சரித்துள்ளார் சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச.

கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ள அவர்,

“வடக்கிலுள்ள சில அரசியல்வாதிகளின் செயல்கள் மற்றும் கருத்துக்கள், நாட்டைப் பிளவுபடுத்தும் பரப்புரையின் ஒரு அங்கமாக இருக்கலாம்.

அவர்கள் இன்னொரு இரத்தக் களரிக்கே வழிவகுக்கின்றனர். நாட்டை நேசிக்கும் எவரும், அத்கைய நிலைக்குத் திரும்புவதை விரும்பமாட்டார்கள்.

போரின் போது விடுதலைப் புலிகளுக்குப் பயந்து வடக்கிலுள்ள பெரும்பாலான அரசியல்வாதிகள் அமைதியாக இருந்தனர்.

பலர் விடுதலைப் புலிகளுக்காக வேலை செய்தனர். நாங்கள் போரை முடிவுக்குக் கொண்டு வந்ததும், அந்த அரசியல்வாதிகள் கதாநாயகர்கள் ஆகி விட்டனர்.

எல்லா இன, மதங்களையும் சேர்ந்த மக்கள், முப்படையினரின் அர்ப்பணிப்பினால் தான் தீவிரவாதத்தின் பிடியில் இருந்து விடுவிக்கப்பட்டதை மறந்து விடக் கூடாது.” என்றும் அவர் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *