மேலும்

‘மே -18 தமிழின அழிப்பு நாள்’ – வடக்கு மாகாண சபை பிரகடனம்

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவு நாளான, மே 18 ஆம் நாளை,  தமிழின அழிப்பு நாளாக வடக்கு மாகாணசபை பிரகடனம் செய்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

இன்று நடந்த வடக்கு மாகாண சபையின் அமர்வில் அனந்தி சசிதரன் இந்தப் பிரேரணையை முன்மொழிந்தார்.

கடந்த 2009 ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் நாள், முள்ளிவாய்க்காலில் தமிழர்கள் மீது இனஅழிப்பு முன்னெடுக்கப்பட்டது. எனவே மே 18 ஆம் நாளை இனஅழிப்பு நாளாக பிரகடனம் செய்யுமாறு அமைச்சர் அனந்தி சசிதரன், சபையில் கோரிக்கை விடுத்தார்.

அத்துடன், உலக தமிழ் மக்கள் அனைவரும் இனஅழிப்பு நாளான மே 18 ஆம் நாளை  துக்கநாளாக கடைப்பிடிக்குமாறு கோர வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

இதனை சபை ஏகமனதாக ஏற்றுக்கொண்டதுடன், மே 18 ஆம் நாளை இனஅழிப்பு நாளாக பிரகடனம் செய்வதாக தீர்மானம் எடுக்கப்படுவதாக அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் அறிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *