மேலும்

புதிய தேசிய பாதுகாப்புத் திட்டத்துக்கு வெளிநாட்டு ஆலோசனை – பாதுகாப்புச்சபைக் கூட்டத்தில் ஆராய்வு

ruwan-mann (1)முப்படைகளின் தளபதிகள் மற்றும் காவல்துறை மா அதிபரால் வரையப்படும் புதிய தேசிய பாதுகாப்புத் திட்டம் இந்த ஆண்டு இறுதிக்குள் நடைமுறைக்கு கொண்டு வரப்படும் என்று சிறிலங்காவின் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தன தெரிவித்துள்ளார்.

நாட்டின் தற்போதைய பாதுகாப்புத் தேவையைக் கருத்தில் கொண்டு புதிய தேசிய பாதுகாப்புத் திட்டம் ஒன்றை வகுக்குமாறு சிறிலங்கா அதிபர் மைத்தரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார்.

இதன் பிரதான நோக்கம், நாட்டில் இன்னாரு ஆயுதக் கிளர்ச்சி ஏற்படுவதை தடுப்பதேயாகும்.

வெலிக்கந்தையில் நேற்று முன்தினம் படையினர் மத்தியில் உரையாற்றிய சிறிலங்கா அதிபர், இந்த புதிய தேசிய பாதுகாப்புத் திட்டம், பிராந்திய மற்றும் தேசிய பாதுகாப்பு விடயங்கள் குறித்து கவனத்தில் கொள்ளும் என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில், பாதுகாப்புடன் தொடர்புடைய விவகாரங்களில் சிறிலங்காவுக்கு ஒத்துழைப்பு வழங்கும், அமெரிக்கா, இந்தியா போன்ற நெருங்கிய நட்பு நாடுகளின் மூலோபாய உள்ளீடுகள் இதற்காகப் பெற்றுக் கொள்ளப்படுமா என்று சிறிலங்காவின் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தனவிடம், கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று கேள்வி எழுப்பியிருந்தது.

இதற்கு அவர், இதுகுறித்து தேசிய பாதுகாப்புச் சபைக் கூட்டத்தில் ஆராயப்பட்டதாகவும், ஆனால் இறுதி முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *