மேலும்

புலம்பெயர் தமிழர்களுடன் சாதகமான சந்திப்பு – எரிக் சொல்ஹெய்ம் தகவல்

erik-solhaimபுலம்பெயர் தமிழர்களுடன் தாம் பேச்சுக்களை நடத்தியிருப்பதாகவும், இந்தப் பேச்சுக்கள் சாதகமான வகையில் அமைந்திருப்பதாகவும், சிறிலங்காவுக்கான நோர்வேயின் முன்னாள் சமாதானத் தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.

நோர்வேயின் தலைநகர், ஒஸ்லோவில் நடந்த இந்தப் பேச்சுக்களின் போது, முதலீடு மற்றும் உதவிகள் என்ற வகையில் சிறிலங்காவுக்கு உதவ அவர்கள் பலமான விருப்பம் வெளியிட்டுள்ளதாகவும், எரிக் சொல்ஹெய்ம் குறிப்பிட்டுள்ளார்.

புலம்பெயர் சமூகத்தினரிடம் பெரியளவு வளங்கள் இருப்பதாகவும் எரிக் சொல்ஹெய்ம் கூறியுள்ளார்.

டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவு ஒன்றிலேயே எரிக் சொல்ஹெய்ம் இந்த தகவல்களை வெளியிட்டுள்ளார்.

ஒரு கருத்து “புலம்பெயர் தமிழர்களுடன் சாதகமான சந்திப்பு – எரிக் சொல்ஹெய்ம் தகவல்”

  1. Palks Straiters
    Palks Straiters says:

    புலம்பெயர் மக்களிடம் இருக்கும் வளங்கள் சிறீலங்கா அரச முகவர் இயந்திரங்களின் கைக்குள் விரைவில் கொண்டு செல்வது மிகவும் அவசியமானதாகும். தற்போதய நிலையில் புலம்பெயர் தமிழர்கள் அரசை விட்டு பிரிந்து இருப்பது சட்டபூர்வ நிலையை ஏற்று கொள்ளாத தன்மையை எடுத்து காட்டுகிறது. இது வருங்காலத்தில் சிறீலங்காவின் எதிர்காலத்திற்கு மிகவும் அபாயகரமான நிலைகளை உருவாக்கலாம் என்பது மேலைதேய பார்வையாகும். ஆரசியல் செயற்பாடுகள் பொருளாதார வளங்களுடன் கூடிவருமானால் சிறீலங்காவின் வெளியுறவு செயற்பாடுகளுக்கு சமபல நிலைகளை உருவாக்கவல்லது. 2009இல் இராணுவ ரீதியாக முடக்கப்பட்ட பின்பும் பொருளாதார பலநிலை தமிழர்கள் மத்தியில் தன்னம்பிக்கையை இன்னமும் ஊட்டுவதாக உள்ளது. இதனையும் முடக்குவதானால் தமிழர்களின் பொருளாதார பலம் சிறீலங்கா அரசினால் கையாளப்பட கூடிய நிலையை உருவாக்கவேண்டிய அவசியம் உள்ளது. முதலீடுகள் குறித்த விடயத்தில் மேலை தேய வங்கிகள் உத்தரவாத பத்திரங்களின் முலம் உறுதிப்படுத்தவதன் மூலம தமிழர்கள் தமது முதலீட்டை பாதுகாக்கும் தந்திரங்களை கையாளமுடியுமா?, சிறீலங்கா அரச செயற்பாடுகளுக்கு அப்பால் தமிழர்கள் நோக்கியதான தனித்துவ முதலீடுகளை செய்ய முன்வருவது தமிழர்களுக்க என்றும் பாதுகாப்பானது. இனியும் கலவரங்களிலும் சொத்து பறிப்புகளிலும் பாராளுமன்ற சட்ட மசோதாகளிலம் எல்லாத்தையும் இழந்து நடுரோட்டுக்கு வருவதை தவிர்த்து கொள்வது நல்லது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *