மேலும்

போர்க்குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளவரும் இராணுவத் தலைமை அதிகாரி பதவிக்கு பரிந்துரை

military-officersசிறிலங்கா இராணுவத்தின் இரண்டாவது நிலையில் உள்ள பதவியான- இராணுவத் தலைமை அதிகாரி பதவிக்கு, ஆறு பேரின் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் கிரிசாந்த டி சில்வா, இராணுவத் தலைமை அதிகாரிக்கு நியமிக்கப்படக் கூடியவர்கள் தொடர்பான ஆறு பேர் கொண்ட பட்டியலை, பாதுகாப்பு அமைச்சுக்கு அனுப்பி வைத்துள்ளார்.

மேஜர் ஜெனரல் ஜனக ரத்நாயக்க, மேஜர் ஜெனரல் மிலிந்த பீரிஸ், மேஜர் ஜெனரல் லலித் தவுலகல, மேஜர் ஜெனரல் ஜெகத் ரம்புக்பொத்த, மேஜர் ஜெனரல் சுமித் மானவடு, மேஜர் ஜெனரல் ஜெகத் டயஸ் ஆகியோரே இவர்களாவர்.

இவர்களில், முன்னைய அரசுக்கு நெருக்கமானவர்களும், போர்க்குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்களும் அடங்கியுள்ளனர்.

2010ம் ஆண்டு அதிபர் தேர்தலின் பின்னர், பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவைக் கைது செய்தவர் மேஜர் ஜெனரல் மானவடு என்பதும், இறுதிக்கட்டப் போரில், இடம்பெற்ற போர்க்குற்றங்களுக்குப் பொறுப்பானவர் என்று குற்றம்சாட்டப்பட்டுள்ளவர்களில் மேஜர் ஜெனரல் ஜெகத் டயசும் ஒருவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *