மேலும்

இப்போது முன்னணியில் யார்? – பிந்திய நிலவரம்

MR-maithri (1)

சிறிலங்கா அதிபர் தேர்தலில் இதுவரை 22 மாவட்டங்களின் அஞ்சல் வாக்குகள் மற்றும், 103 தேர்தல் தொகுதிகளின் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், மைத்திரிபால சிறிசேன 51.54% வாக்குகளைப் பெற்று முன்னணியில் இருக்கிறார். (காலை 9.30 மணி)

மகிந்த ராஜபக்ச 47.07% வீத வாக்குகளைப் பெற்று  345,375  வாக்குகளால்  பின்தங்கிய நிலையில் உள்ளார்.

இதுவரை வெளியான முடிவுகளின் படி, மகிந்த ராஜபக்ச 3,639,715 வாக்குகளைப் பெற்றுள்ளார்.

மைத்திரிபால சிறிசேன 3,985,090 வாக்குகளுடன் முன்னணி வகிக்கிறார்.

மொத்தமுள்ள 22 தேர்தல் மாவட்டங்களில், 11 மாவட்டங்களில், மைத்திரிபால சிறிசேனவும், 11  மாவட்டங்களில் மகிந்த ராஜபக்சவும் முன்னணியில் இருக்கின்றனர்.

வடக்கில் முடிவுகள் வெளியான அனைத்து தொகுதிகளிலும், கிழக்கில் முடிவுகள் வெளியான சேரநுவர தவிர்ந்த ஏனைய தொகுதிகளிலும் மைத்திரிபால சிறிசேன வெற்றி பெற்றுள்ளார்.

மலையகத்தில், கண்டி, நுவரெலிய, பதுளை மாவட்டங்களிலும், பொலன்னறுவ, கொழும்பு மாவட்டங்களிலும் மைத்திரிபாலவுக்கு சாதகமான முடிவுகள் வந்துள்ளன.

அதேவேளை, தெற்கில், அம்பாந்தோட்டை, மாத்தறை, மொனராகல, காலி மாவட்டங்களிலும், அனுராதபுர, குருநாகல், கேகாலை, இரத்தினபுரி, களுத்துறையிலும், மகிந்த ராஜபக்சவின் ஆதிக்கம் இருந்து வருகிறது.

********

சிறிலங்கா அதிபர் தேர்தலில் இதுவரை மாவட்டங்களின் அஞ்சல் வாக்குகள் மற்றும், தேர்தல் தொகுதிகளின் முடிவுகள் என 50 முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், மைத்திரிபால சிறிசேன 52.76 % வாக்குகளைப் பெற்று முன்னணியில் இருக்கிறார். (காலை 6.00 மணி)

மகிந்த ராஜபக்ச 45.98% வீத வாக்குகளைப் பெற்று 143,769 வாக்குகளால்  பின்தங்கிய நிலையில் உள்ளார்.

இதுவரை வெளியான முடிவுகளின் படி, மகிந்த ராஜபக்ச 974,751 வாக்குகளைப் பெற்றுள்ளார்.

மைத்திரிபால சிறிசேன 1,118,520 வாக்குகளுடன் முன்னணி வகிக்கிறார்.

மொத்தமுள்ள 22 தேர்தல் மாவட்டங்களில், 13 மாவட்டங்களில், மைத்திரிபால சிறிசேனவும், 9  மாவட்டங்களில் மகிந்த ராஜபக்சவும் முன்னணியில் இருக்கின்றனர்.

வடக்கில் முடிவுகள் வெளியான அனைத்து தொகுதிகளிலும், கிழக்கில் முடிவுகள் வெளியானவற்றில் சேரநுவர தவிர்ந்த ஏனையவற்றிலும் மைத்திரிபால சிறிசேன வெற்றி பெற்றுள்ளார்.

மலையகத்தில், கண்டி, நுவரெலிய, பதுளை மாவட்டங்களிலும், அனுராதபுர, பொலன்னறுவ மாவட்டங்களிலும் மைத்திரிபாலவுக்கு சாதகமான முடிவுகள் வந்துள்ளன.

அதேவேளை, தெற்கில், அம்பாந்தோட்டை, மாத்தறை, மொனராகல,காலி மாவட்டங்களிலும், இரத்தினபுரியிலும், மகிந்த ராஜபக்சவின் ஆதிக்கம் இருந்து வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *