மேலும்

Archives

திறக்கப்பட்டது யாழ். விமான நிலையம் – தரையிறங்கியது முதல் விமானம்

யாழ்ப்பாணம் அனைத்துலக விமான நிலையத்தை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இன்று முற்பகல் திறந்து வைத்தார். இந்த நிகழ்வில் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க, மற்றும் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

யாழ்ப்பாணத்துக்கான விமான சேவை பெருமைமிக்க தருணம்  – எயர் இந்தியா தலைவர்

சென்னைக்கும் யாழ்ப்பாணத்துக்கும் இடையிலான விமான சேவை ஆரம்பித்து வைக்கப்படுவது, ஒரு பெருமைமிக்க தருணம் என்று எயர் இந்தியா நிறுவத்தின் தலைவரும், எயர் இந்தியா குழுமத்தின் முகாமைத்துவ பணிப்பாளருமான அஷ்வானி லொஹானி தெரிவித்துள்ளார்.

சென்னையில் இருந்து யாழ்ப்பாணம் புறப்பட்டது முதல் விமானம்

யாழ்ப்பாணம் அனைத்துலக விமான நிலையத்துக்கு, சென்னை விமான நிலையத்தில் இருந்து முதல் விமானம் இன்று காலை புறப்பட்டுச் சென்றுள்ளது.

பலாலியில் பரீட்சார்த்தமாக தரையிறங்கியது அலையன்ஸ் எயர் விமானம்

யாழ்ப்பாணம் அனைத்துலக விமான நிலையத் திறப்பு விழா நாளை நடக்கவுள்ள நிலையில், எயர் இந்தியாவின் அலையன்ஸ் எயர் விமானம் ஒன்று நேற்று பலாலி விமான நிலையத்தில் பரீட்சார்த்தமாக தரையிறக்கப்பட்டது.

ஐந்து தமிழ்க் கட்சிகள் கையெழுத்திட்ட பொது உடன்பாட்டு ஆவணம்

ஐந்து தமிழ் கட்சிகளால் கையெழுத்திடப்பட்டுள்ள பொது இணக்க ஆவணம்- தமிழ் தேசம், அதன் இறைமை, தமிழ் மக்களின்  சுயநிர்ணய உரிமை, சமஷ்டித்  தீர்வு, பயங்கரவாதத் தடைச்சட்டம் நீக்கம் உள்ளிட்ட 13 கோரிக்கைகளை  முன்வைத்து, தயாரிக்கப்பட்டுள்ளது.

சிறிலங்கா அதிபர் தேர்தல் – ஐந்து தமிழ்க் கட்சிகள் பொது உடன்பாட்டில் கைச்சாத்து

சிறிலங்கா அதிபர் தேர்தலில் தமிழ் மக்களின் ஒருமித்த நிலைப்பாட்டை வெளிப்படுத்தும் நோக்கில், ஆறு தமிழ்க் கட்சிகளுடன், பல்கலைக்கழக மாணவர் ஒன்றியங்களின் ஏற்பாட்டில் நடத்தப்பட்ட பேச்சுக்களை அடுத்து, பொது இணக்கப்பாட்டு ஆவணத்தில் ஐந்து கட்சிகள் இன்று கையெழுத்திட்டன.

முன்னாள் புலி உறுப்பினர் வீட்டில் பெருமளவு ஆயுதங்கள் மீட்பு – மூவர் கைது

கிளிநொச்சியில் விடுதலைப் புலிகள் இயக்க முன்னாள் உறுப்பினர் ஒருவரின் வீட்டில் இருந்து துப்பாக்கிகள் மற்றும் வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக சிறிலங்கா காவல்துறையினர் தெரிவித்தனர்.

17 ஆசனங்களைக் கைப்பற்றியது பொதுஜன பெரமுன – இறுதி முடிவு வெளியானது

எல்பிட்டிய பிரதேச சபைக்கு இன்று நடந்த தேர்தலில் சிறிலங்கா பொதுஜன பெரமுன 17 ஆசனங்களைக் கைப்பற்றி வெற்றி பெற்றுள்ளது.

வாக்குச்சீட்டில் அடுத்தடுத்து கோத்தா, நாமலின் பெயர்கள்

சிறிலங்கா அதிபர் தேர்தலுக்கான வாக்குச் சீட்டில், கோத்தாபய ராஜபக்சவின் பெயரும் நாமல் ராஜபக்சவின் பெயரும் அடுத்தடுத்து இடம்பெறவுள்ளன.

ஆட்சிக்கு வந்தால் சரத் பொன்சேகாவை பாதுகாப்பு அமைச்சராக்குவேன் – சஜித்

தாம் ஆட்சிக்கு வந்தால், பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா பாதுகாப்புக்குப் பொறுப்பான உயர் பதவிக்கு நியமிக்கப்பட்டு, தேசிய பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் என்று ஐதேகவின் அதிபர் வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.