சிறிலங்காவில் நல்லிணக்கம், மனித உரிமைகளை வலியுறுத்துகிறார் பாப்பரசர்
சிறிலங்காவில் மனித உரிமைகளுக்கு மதிப்பளிக்கும் நிலையையும், உண்மையான நல்லிணக்கத்தையும் தாம் எதிர்பார்ப்பதாக, பாப்பரசர் முதலாவது பிரான்சிஸ் தெரிவித்துள்ளார்.
சிறிலங்காவில் மனித உரிமைகளுக்கு மதிப்பளிக்கும் நிலையையும், உண்மையான நல்லிணக்கத்தையும் தாம் எதிர்பார்ப்பதாக, பாப்பரசர் முதலாவது பிரான்சிஸ் தெரிவித்துள்ளார்.
கத்தோலிக்கத் திருச்சபையின் முதல்வரான பாப்பரசர் முதலாவது பிரான்சிஸ் மூன்று நாள் பயணமாக சற்று முன்னர் சிறிலங்காவை வந்தடைந்துள்ளார்.
சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவை முன்கூட்டியே தேர்தலை நடத்த வைத்து, அவர் படுகுழியில் விழக் காரணமானவரான, அவரது சோதிடர் சுமணதாச அபேகுணவர்த்தன சிங்கப்பூருக்குச் சென்று விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவினால், சட்டவிரோதமான முறையில் பதவியில் அமர்த்தப்பட்ட சிறிலங்காவின் பிரதம நீதியரசர் மொகான் பீரிசை பதவி விலகக் கோரி இன்று உயர் நீதிமன்றத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன.
சிறிலங்காவின் ஆறாவது நிறைவேற்று அதிகாரமுள்ள அதிபரான மைத்திரிபால சிறிசேன, இன்று தனது கடமைகளை முறைப்படி ஏற்றுக் கொண்டார்.
அமைதியான முறையில் தேர்தலை நடத்தும்படி, அமெரிக்க இராஜாங்கச் செயலர் தன்னிடம் கூறியதாகவும், அதன்படியே செய்து விட்டேன் என்றும் தெரிவித்துள்ளார் சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச.
மகிந்த ராஜபக்சவின் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்தில் அமைச்சர்களாகப் பணியாற்றிய, 20 நாடாளுமன்ற உறுப்பினர்கள், இன்றுமாலை அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவளிக்க முன்வந்துள்ளனர்.
தேசிய அரசாங்கத்தில் இணைந்து கொள்ள முன்வருமாறு அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்துள்ளார் சிறிலங்காவின் புதிய அதிபர் மைத்திரிபால சிறிசேன.
சிறிலங்காவை விட்டுத் தப்பிச் சென்று வெளிநாடுகளில் வசித்து வந்த, சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுக்கு நெருக்கமான – இரண்டு மூத்த முன்னாள் இராணுவ அதிகாரிகள் நேற்று நாடு திரும்பியுள்ளனர்.
கொழும்பில் நேற்று மாலை நடந்த புதிய அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் பதவியேற்பு விழா மிகவும் எளிமையான முறையிலேயே ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.