மேலும்

Tag Archives: ஷங்ரி-லா

எல்லா தற்கொலைக் குண்டுதாரிகளும் அடையாளம் காணப்பட்டனர்

சஹ்ரான் காசிம் உள்ளிட்ட எல்லா தற்கொலைக் குண்டுதாரிகளும், மரபணுச் சோதனையின் மூலம், அடையாளம் காணப்பட்டு உறுதி செய்யப்பட்டுள்ளதாக சிறிலங்கா காவல்துறை பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

சஹ்ரானின் மகளின் இரத்த மாதிரியைப் பெற்று மரபணுச் சோதனை நடத்த நீதிமன்றம் அனுமதி

ஷங்ரி-லா விடுதியில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் உயிரிழந்த தற்கொலைக் குண்டுதாரி சஹ்ரான் காசிமின் மரணத்தை உறுதிப்படுத்துவதற்கு, அவரது மகளின் இரத்த மாதிரியைப் பெற்று மரபணுச் சோதனையை நடத்த நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

ஆறு வீடுகளை வாடகைக்கு பெற்றிருந்த ஷங்ரி லா குண்டுதாரிகள்

ஷங்ரி-லா விடுதியில் தாக்குதலை நடத்திய இரண்டு தற்கொலைக் குண்டுதாரிகளும், நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் குறைந்தது ஆறு வீடுகளை வாடகைக்கு எடுத்துப் பயன்படுத்தியிருந்தனர் என்று கண்டறியப்பட்டுள்ளது.

மூன்று தற்கொலைக் குண்டுதாரிகள் குறித்து மரபணுச் சோதனைக்கு உத்தரவு

ஈஸ்டர் ஞாயிறு நாளன்று கொழும்பில் மூன்று விடுதிகளில் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களை நடத்தியவர்களின் அடையாளத்தை உறுதிப்படுத்த, மரபணுச் சோதனைகளை நடத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குண்டைப் பொருத்தி விட்டு தப்பினார் சஹ்ரான்? – புலனாய்வு அமைப்புகள் சந்தேகம்

ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்களின் சூத்திரதாரியான சஹ்ரான் காசிம், ஷங்ரி-லா விடுதி குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டமை குறித்து சந்தேகம் வெளியிட்டுள்ள புலனாய்வு அமைப்புகள், அவர் உயிருடன் இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளன.

வாள்களுடன் சிக்கினார் தற்கொலைக் குண்டுதாரிகளின் அண்ணன்

கொழும்பில் இரண்டு விடுதிகளில் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களை நடத்தியவர்களின் மூத்த சகோதரர் வாள்கள் மற்றும் துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவிசாவளை குண்டு தொழிற்சாலையில் 9 பாகிஸ்தானியர்கள், 3 இந்தியர்கள் கைது

கொழும்பில் நேற்று முன்தினம் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல்களை அடுத்து, அவிசாவளையில் உள்ள செப்பு வயர் தொழிற்சாலையில் 9 பாகிஸ்தானியர்களும், 3 இந்தியர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தற்காலிகமாக மூடப்பட்ட கொழும்பு ஆடம்பர விடுதிகள்

கொழும்பில் நேற்று நடத்தப்பட்ட தொடர் குண்டுத் தாக்குதல்களை அடுத்து, கொழும்பில் உள்ள பல ஐந்து நட்சத்திர ஆடம்பர விடுதிகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.

குண்டுத் தாக்குதலுக்குப் பயன்படுத்திய வான், கார் சிக்கின- மறைவிடங்களும் முற்றுகை

சிறிலங்காவில் நேற்று பல்வேறு இடங்களிலும் நிகழ்ந்த குண்டுவெடிப்புகளுடன் தொடர்புடைய நபர்களால் பயன்படுத்தப்பட்ட வாகனங்கள் இரண்டு கைப்பற்றப்பட்டுள்ளன.