யாழ்ப்பாணத்துக்கான விமான சேவை- முதலீடு செய்ய தனியாருக்கு அழைப்பு
யாழ்ப்பாணம் மற்றும் இந்தியாவுக்கான விமான சேவையில் முதலீடு செய்யுமாறு சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க தனியார் துறையினருக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
யாழ்ப்பாணம் மற்றும் இந்தியாவுக்கான விமான சேவையில் முதலீடு செய்யுமாறு சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க தனியார் துறையினருக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரியும், ஜெனிவாவில் சிறிலங்காவுக்கு மேலும் கால அவகாசம் வழங்கக் கூடாது என்பதையும் வலியுறுத்தியும், கிழக்கில் நேற்று முழு அடைப்புப் போராட்டமும், பாரிய பேரணியும் நடத்தப்பட்டன.
2019ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் இன்று சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் மங்கள சமரவீரவினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
ரியூனியன் தீவில் இருந்து பிரெஞ்சு அதிகாரிகளால் திருப்பி அனுப்பப்பட்ட 64 பேர் எட்டுப் பேரை விளக்கமறியலில் வைக்க நீர்கொழும்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வடக்கு மாகாணத்தில் கடந்த வாரம் ஏற்பட்ட வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 72 ஆயிரமாக அதிகரித்துள்ளது. இடர் முகாமைத்துவ நிலையம் இந்த தகவலை நேற்று வெளியிட்டுள்ளது.
வடக்கின் ஐந்து மாவட்டங்களிலும் ஏற்பட்டுள்ள வெள்ளத்தினால், 14 ஆயிரம் குடும்பங்களைச் சேர்ந்த 55 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக, சிறிலங்காவின் இடர்முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.
சிறிலங்காவில் கண்ணிவெடிகளை அகற்றுவதற்கு, அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் இந்த ஆண்டில், 600 மில்லியன் ரூபாவை வழங்குவதாக அறிவித்துள்ளது. இதுதொடர்பாக கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
சிறிலங்காவில் 100இற்கும் அதிகமான நகரங்கள் வெண்சுருட்டு விற்பனையைப் புறக்கணிப்பதாக, சுகாதார அமைச்சை மேற்கோள்காட்டி, சீனாவின் சின்ஹுவா செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
வடக்கு, கிழக்கில் புதிதாக விடுவிக்கப்பட்ட காணிகளில் மீளக் குடியேறியுள்ள 600 குடும்பங்களின், அடிப்படை உட்கட்டமைப்பு சேவைகளுக்காக பிரித்தானிய 1 மில்லியன் பவுண்ட்களை கொடையாக வழங்கியுள்ளது.
யாழ்ப்பாணக் குடாநாட்டில் அண்மையில் இடம்பெற்ற வாள்வெட்டுகள் உள்ளிட்ட வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக, 29 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக, சிறிலங்கா காவல்துறை பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.