மேலும்

Tag Archives: முல்லைத்தீவு

சரணடைந்த புலிகளின் பட்டியலை ஜனவரி 30இல் சமர்ப்பிக்க சிறிலங்கா இராணுவத்துக்கு உத்தரவு

போரின் இறுதிக்கட்டத்தில் சிறிலங்கா படையினரிடம் சரணடைந்த விடுதலைப் புலிகளின் பட்டியலை சமர்ப்பிக்குமாறு, சிறிலங்கா இராணுவத்துக்கு முல்லைத்தீவு மாவட்ட நீதிவான் நேற்று உத்தரவிட்டுள்ளார்.

தமிழ்நாட்டை மிரட்டும் நடா புயல் – யாழ். குடாநாடு தப்புமா?

வங்கக் கடலில் உருவாகியுள்ள நடா எனப் பெயரிடப்பட்டுள்ள புயல், யாழ்ப்பாணக் குடாநாட்டுக்கு சற்று வடக்காக, வடமேற்குத் திசையில் கடந்து செல்லும் என்று வானிலை ஆய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

திருமலை வழியான வடக்கு அதிவேக நெடுஞ்சாலை திட்டம் – இந்த ஆண்டு ஆரம்பம்

திருகோணமலை ஊடான வடக்கு அதிவேக நெடுஞ்சாலை திட்டம் இந்த ஆண்டில் செயற்படுத்த ஆரம்பிக்கப்படும் என்று, சிறிலங்காவின் நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

வடக்கில் காடுகள் அழிப்பை ஆராய அதிகாரிகள் குழு – சிறிலங்கா அதிபர் அனுப்புகிறார்

வடக்கில் நடந்து வரும் சட்டவிரோத காடழிப்பு, மணல் அகழ்வு மற்றும், மீள்குடியேற்றம் தொடர்பாக நேரடியாகஆராய அதிகாரிகள் கொண்ட குழுவொன்று அமைக்கப்படும் என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நேற்று நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ளார்.

இந்திய இராணுவத் தளபதியின் இரகசிய நிகழ்ச்சிநிரல் – இன்று யாழ்ப்பாணம் செல்கிறார்

சிறிலங்காவுக்கான மூன்று நாள் அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொண்டுள்ள இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் தல்பீர் சிங் சுஹக் இன்று யாழ்ப்பாணம், முல்லைத்தீவு உள்ளிட்ட இடங்களுக்குச் செல்லவுள்ளார்.

சிறிலங்கா இராணுவத்தை தரமுயர்த்த உதவுவதாக இந்தியத் தளபதி உறுதி

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் தல்பீர்சிங் சுஹக், இன்று சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் கிரிசாந்த டி சில்வா மற்றும், உயர்மட்ட அதிகாரிகளுடன் பேச்சுக்களை நடத்தியுள்ளார்.

வடக்கில் கொட்டும் பெருமழை – ஆயிரக்கணக்கான குடும்பங்கள் நிர்க்கதி

சிறிலங்காவில் கொட்டி வரும் பெரு மழையினால், ஒரு இலட்சம் பேர் வரையில் பாதிக்கப்பட்டுள்ளனர், குறிப்பாக வடக்கு மாகாணம் வெள்ளத்தினால் கடும் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கிறது.

காயம்பட்ட முல்லைத்தீவின் அழகு – இந்திய ஊடகவியலாளர்

போரின் போது இருந்த ஊரடங்குக் கலாசாரமானது தற்போதும் வடக்கில் தாக்கத்தைச் செலுத்துவதைக் காணலாம். அதாவது வடக்கிலுள்ள வர்த்தக நிலையங்கள் சூரியன் மறையும் நேரத்தில் பூட்டப்படுவதானது ஊரடங்கின் தாக்கத்தை உறுதிப்படுத்துகின்றது.

வடக்கு, கிழக்கு மாகாணங்கள் முற்றிலும் செயலிழந்தன – முழுஅடைப்பு போராட்டம் வெற்றி

தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்கக் கோரி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் அழைப்பு விடுக்கப்பட்ட முழு அடைப்பு போராட்டத்தினால், வடக்கு,கிழக்கு மாகாணங்கள் முற்றாகவே செயலிழந்து போயுள்ளன.

கொக்கிளாயில் உயிருடன் கரையொதுங்கிய திமிங்கலத்தை கடலுக்கு விட 8 மணி நேரம் போராட்டம்

முல்லைத்தீவு, கொக்கிளாய் பகுதியில் மீனவர்களின் வலையில் சிக்கி உயிருடன் கரையொதுங்கிய 70 அடி நீளமான திமிங்கலம் ஒன்று 8 மணிநேர போராட்டத்தின் பின்னர், கடலுக்குள் விடப்பட்டது.