மேலும்

Tag Archives: மகிந்த ராஜபக்ச

சுதந்திரமான தேர்தலை நடத்துமாறு மகிந்தவிடம் வலியுறுத்தினார் ஜோன் கெரி

சிறிலங்காவில் இன்று அதிபர் தேர்தல் வன்முறைகளோ, அச்சுறுத்தல்களோ இன்றி, சுதந்திரமாக நடத்தப்பட வேண்டும் என்று, சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவிடம், அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரி வலியுறுத்தியுள்ளார்.

சிறிலங்கா அதிபர் தேர்தல் – பரபரப்பான சூழலில் இன்று பலப்பரீட்சை

சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கும், எதிரணியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையில் கடும் போட்டியை ஏற்படுத்தியுள்ள சிறிலங்கா அதிபர் தேர்தல் பரபரப்பான சூழலில் இன்று நடைபெறுகிறது.

மகிந்தவைத் தூக்கியெறியும் கொமன்வெல்த் – கொழும்பு ஆய்வாளர் எச்சரிக்கை

நாளை நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில், மோசடிகளைச் செய்து வெற்றி பெற முனைந்தால், கொமன்வெல்த் அமைப்பின் தலைமைப் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்ச தூக்கியெறியப்படும் நிலை உருவாகும் என்று கொழும்பு அரசியல் ஆய்வாளர் ஒருவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தோல்விக்குப் பின் மகிந்தவை வெளியேற்ற சந்திரிகா வைத்துள்ள இரகசியத் திட்டம்

அதிபர் தேர்தலில், தோல்விடைந்த பின்னர், பதவியை விட்டு விலக மகிந்த ராஜபக்ச முன்வராது போனால், அவரை வெளியேற்றுவதற்கு எதிரணியிடம் ஒரு இரகசியத் திட்டம் இருப்பதாக, முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

திடீரெனப் பலமிழந்தவராக தோற்றமளிக்கும் சிறிலங்கா அதிபர் – பிபிசி

சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச திடீரென இளைத்து – பலவீனமானவர் போலத் தோற்றமளிப்பதாக, பிபிசியின் செய்தியாளர் சாள்ஸ் ஹவிலன்ட் தெரிவித்துள்ளார்.

களைகட்டாத மகிந்தவின் கடைசிப் பரப்புரை மேடை

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளரான சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவின் இறுதிப் பரப்புரைக் கூட்டம் நேற்றிரவு கஸ்பேவவில் இடம்பெற்றது.

மகிந்தவின் திட்டத்துக்கு இராணுவம் ஒத்துழைக்காது – அனுரகுமார திசநாயக்க

சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச இராணுவத்தைப் பயன்படுத்தி அதிகாரத்தைத் தக்கவைத்துக் கொள்ள முயன்றால், பொதுமக்களுடன் இணைந்து ஜேவிபி அதற்கெதிராக போராடும் என்று ஜேவிபியின் அனுரகுமார திசநாயக்க தெரிவித்துள்ளார்.

இறுதிக்கட்டத்தை எட்டுகிறது அதிபர் தேர்தல் – இன்றுடன் பரப்புரைகள் முடிவு

வரும் 8ம் நாள் நடக்கவுள்ள சிறிலங்கா அதிபர் தேர்தலுக்கான பரப்புரைகள் யாவும், இன்று நள்ளிரவுடன் முடிவுக்கு கொண்டு வரப்பட வேண்டும் என்று சிறிலங்கா தேர்தல் ஆணையாளர் அறிவித்துள்ளார்.

‘ மகிந்தவை வெளியேற்ற ஒன்று திரளுங்கள்’ – முதல்வர் விக்னேஸ்வரன் அழைப்பு

வடமாகாண சபையை முடக்கப் பார்த்த சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவை, அவரது இருக்கையை விட்டு வெளியேற்ற ஒன்று திரண்டு வாருங்கள் என்று அழைப்பு விடுத்துள்ளார்,  வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன்.

நாட்டை விட்டுத் தப்பியோடமாட்டேன் – மகிந்த வாக்குறுதி

வரும் 8ம் நாள் நடக்கவுள்ள அதிபர் தேர்தலுக்குப் பின்னர் தான் சிறிலங்காவை விட்டுத் தப்பி ஓடமாட்டேன் என்றும், தொடர்ந்து நாட்டிலேயே இருப்பேன் என்றும் தெரிவித்துள்ளார் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச.