புதிய ஆண்டில் மைத்திரி- ரணில் கூட்டு அரசை கவிழ்ப்பேன் – மகிந்த சூளுரை
புதிய ஆண்டில் மைத்திரிபால சிறிசேன- ரணில் விக்கிரமசிங்க கூட்டு அரசாங்கத்தை கவிழ்ப்பதே தனது இலக்கு என்று சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
புதிய ஆண்டில் மைத்திரிபால சிறிசேன- ரணில் விக்கிரமசிங்க கூட்டு அரசாங்கத்தை கவிழ்ப்பதே தனது இலக்கு என்று சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
சிறிலங்காவின் முன்னாள் பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க உடல்நலக் குறைவினால் கொழும்பிலுள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் இன்று மதியம் காலமானார். இறக்கும் போது அவருக்கு வயது 83 ஆகும்.
அம்பாந்தோட்டையில் காணிகளை அபகரிக்க சீனா முனைவதாக, மேற்கொள்ளப்படும் பரப்புரைகள் தொடர்பாக சிறிலங்கா அரசாங்கத்திடம் சீன அரசாங்கம் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அம்பாந்தோட்டை துறைமுகத்தின் 80 வீத உரிமையை சீனாவுக்கு விற்கும் சிறிலங்கா அரசாங்கத்தின் முயற்சிக்கு எதிராக, நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப் போவதாக, நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.
அம்பாந்தோட்டையில் 15 ஆயிரம் ஏக்கர் காணிகளை சீனாவின் முதலீட்டுத் திட்டங்களுக்காக வழங்கும் போது, பொதுமக்களின் எதிர்ப்பைச் சந்திக்க நேரிடும் என்று, சீனாவுக்குச் சென்றிருந்த சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச எச்சரித்துள்ளார்.
சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச சீனாவுக்கு மேற்கொண்டுள்ள பயணம் தொடர்பாக, தாம் எதையும் அறியவில்லை என்று சீன வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையின் முன்னாள் கட்டளை அதிகாரியான, பிரதி காவல்துறைமா அதிபர் கே.எல்.எம்.சரத்சந்திர கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
நாளை சீனாவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ள சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச, சீன அரசாங்கத் தலைவர்களுடன் பேச்சுக்களை நடத்தவுள்ளார்.
மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் உருவாக்கப்பட்ட மிகின்லங்கா விமான சேவை, ஒன்பது ஆண்டுகளில் 18 பில்லியன் ரூபா இழப்பைச் சந்தித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவின் சீனப் பயணத்துக்குத் தேவையான ஏற்பாடுகள் மற்றும் வசதிகளைச் செய்து கொடுக்குமாறு, சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, வெளிவிவகார அமைச்சு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.