ஐ.நா மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடர் இன்று ஆரம்பம் – ஜெனிவா மீது குவியும் கவனம்
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 30ஆவது அமர்வு, பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று ஜெனிவாவில் ஆரம்பமாகவுள்ளது.
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 30ஆவது அமர்வு, பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று ஜெனிவாவில் ஆரம்பமாகவுள்ளது.
சிறிலங்காவில் இடம்பெற்ற மீறல்கள் குறித்த ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகத்தின் விசாரணை அறிக்கையில், சிறிலங்கா அரசாங்கம் மற்றும் விடுதலைப் புலிகள் மீது கடுமையான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ள போதும், எவரது பெயரும் அதில் குறிப்பிடப்படவில்லை என்று கூறப்படுகிறது.
ஜெனிவாவில் ஆரம்பமாகவுள்ள ஐ.நா மனித உரிமை பேரவைக் கூட்டத் தொடரில், சிறிலங்காவில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பாக, அனைத்துலக விசாரணைப் பொறிமுறையை உருவாக்குவதற்கு இந்தியா ஆதரவளிக்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரியுள்ளது.
சிறிலங்காவில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பாக, உள்நாட்டு விசாரணைக்கு ஆதரவாக, ஜெனிவாவில் அமெரிக்கா கொண்டு வர உத்தேசித்துள்ள தீர்மானத்தை ஆதரிப்பதா இல்லையா என்று, அந்த தீர்மானம் சமர்ப்பிக்கப்பட்ட பின்னரே முடிவெடுக்கப்படும் என்று கனடா அறிவித்துள்ளது.
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் அடுத்த அமர்வில், போர்க்குற்றங்கள் குறித்த அறிக்கை முன்வைக்கப்பட்டாலும், சிறிலங்காவுக்குப் போதிய காலஅவகாசம் வழங்க கோரும், சிறிலங்காவுக்கு ஆதரவான தீர்மானம் ஒன்றை அமெரிக்கா முன்வைக்கவுள்ளது.
சிறிலங்காவின் புதிய அரசாங்கத்துடன் அமெரிக்கா அதிகளவு மென்போக்கை கடைப்பிடிப்பதாகவும், அதன் காரணமாகவே போர்க்குற்றங்கள், பொறுப்புக்கூறல் குறித்து, அமெரிக்க உயர்மட்ட அதிகாரிகள் வாய்திறக்கவில்லை என்றும் கொழும்பு அரசியல் ஆய்வாளர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.
போர்க்குற்றங்களுக்காக ராஜபக்சவினரை அனைத்துலக விசாரணைக்கு கொண்டு செல்ல இடமளிக்க முடியாது என்றாலும், வெள்ளைக்கொடியுடன் சரணடைந்தவர்களை படுகொலை செய்திருந்தால் அவர்களைக் காப்பாற்றப் போவதில்லை என்றும் சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.
சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச அமெரிக்க குடியுரிமையைக் கைவிடுவதற்கு முடிவு செய்துள்ளார். இது தொடர்பான ஆவணங்களை தாம் கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகத்திடம் கையளித்துள்ளதாக கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
சிறிலங்காவின் முன்னாள் கூட்டுப்படைகளின் தளபதியும், பிரேசிலுக்கான தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளவருமான, ஜெனரல் ஜெகத் ஜெயசூரியவுக்கு, அமெரிக்கா நுழைவிசைவு வழங்க மறுத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்களை ஆவணப்படுத்தவும், ஆதாரப்படுத்தவும் வசதியாக கைத்தொலைபேசி செயலி ஒன்று (mobile phone app) நேற்று புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.