நாடாளுமன்றத் தேர்தலுக்கு 4 பில்லியன் ரூபா செலவு
சிறிலங்காவில் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் நடத்தப்படவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கு 4 பில்லியன் ரூபா செலவாகும் என்று சிறிலங்காவின் தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.
சிறிலங்காவில் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் நடத்தப்படவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கு 4 பில்லியன் ரூபா செலவாகும் என்று சிறிலங்காவின் தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.
சிறிலங்காவில் இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ள கொழும்பு துறைமுக நகரத் திட்டம், மீள ஆரம்பிக்கப்பட வாய்ப்புகள் உள்ளதாக, அதன் கட்டுமானப் பணியை மேற்கொண்ட சீனாவின் தொலைத்தொடர்பு கட்டுமான நிறுவனத்தின் உதவித் தலைவர் சன் சியூ தெரிவித்துள்ளார்.
கொழும்புத் துறைமுக நகரத் திட்டத்தை தொடர அனுமதிப்பதா என்பது குறித்து ஆராய புதிய குழுவொன்றை சிறிலங்கா அமைச்சரவை நியமித்துள்ளது. அமைச்சரவைக் கூட்டத்தில் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முன்வைத்த, இதுதொடர்பான யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.
சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவின் குடும்பத்தினரால், சுமார் 18 பில்லியன் டொலர் பணம், வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக, சிறிலங்கா வெளிவிவகார அமைச்ச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார்.
சீனாவுடன் இணைந்து வீதி அபிவிருத்தித் திட்டங்களை மீளவும் ஆரம்பிக்க சிறிலங்கா அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக, சிறிலங்கா அரசாங்க அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தில் இருந்தவர்களால், 2 பில்லியன் டொலருக்கும் அதிகமான கறுப்புப் பணம், டுபாயில் உள்ள வங்கிக் கணக்குகளில் இரகசியமாக வைப்பிலிடப்பட்டுள்ளதாக, விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.
சீன முதலீட்டாளர்களின் நலன்களைப் பாதுகாக்குமாறும், இருதரப்பு பொருளாதார உறவுகளை ஊக்குவிக்குமாறும், சிறிலங்காவிடம், சீனா இன்று மீண்டும் கேட்டுக் கொண்டுள்ளது.
சீனாவிடம் இருந்து முன்னைய அரசாங்கத்தினால் பெறப்பட்ட கடன்களில் ஒரு பகுதியை அடைப்பதற்கு, சிறிலங்காவின் புதிய அரசாங்கம் விடுத்திருந்த கடன் கோரிக்கையை அனைத்துலக நாணய நிதியம் நிராகரித்து விட்டது.