யேமன் மீட்பு நடவடிக்கை – சீனாவுக்கு கிடைத்த அரிய வாய்ப்பு
சீன மக்கள் விடுதலை கடற்படை இராணுவத்தின் மனிதாபிமான நடவடிக்கைகளை கோடிட்டுக்காட்டும் போது, சீனாவானது பூகோள இராணுவப் பிரசன்னம் அனைத்துலகிற்கு நலன் பயப்பதாக நியாயப்படுத்துகிறது.
சீன மக்கள் விடுதலை கடற்படை இராணுவத்தின் மனிதாபிமான நடவடிக்கைகளை கோடிட்டுக்காட்டும் போது, சீனாவானது பூகோள இராணுவப் பிரசன்னம் அனைத்துலகிற்கு நலன் பயப்பதாக நியாயப்படுத்துகிறது.
சிறிலங்கா, இந்தியா உள்ளிட்ட தெற்காசிய நாடுகளுடன், இணைந்து பணியாற்றத் தயாராக இருப்பதாக சீனா தெரிவித்துள்ளது.
போர்ப்பதற்றம் சூழ்ந்துள்ள வளைகுடா நாடான யேமனில் இருந்து, இலங்கையர்களை வெளியேற்றுவதற்கு, இந்தியாவிடம் சிறிலங்கா உதவி கோரியிருந்த நிலையில், சீனா தானாக முன்வந்து உதவி வருகிறது.
அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையில் நிலவும் பூகோள-அரசியல் போட்டியில், இந்திய மாக்கடலின் அதிகார சக்தி என்ற வகையில் இந்தியா நிச்சயமாக ஒரு நடுநிலையாளராகவே செயற்படும்.இவ்வாறு The diplomat ஊடகத்தில், Jhinuk Chowdhury எழுதியுள்ள கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.
திபெத் ஆன்மீகத் தலைவர் தலாய்லாமா சிறிலங்காவுக்கு வருவதற்கு நுழைவிசைவு வழங்கப்படுவதற்கு வாய்ப்பில்லை என்ற சிறிலங்கா அரசாங்கத்தின் நிலைப்பாட்டுக்கு சீனா வரவேற்புத் தெரிவித்துள்ளது.
சிறிலங்காவின் வடக்கு மற்றும் தெற்கு கரையோரப் பகுதிகளில், கைத்தொழில் அல்லது பொருளாதார வலயங்களை நிறுவ சீனா விருப்பம் வெளியிட்டுள்ளது. சிறிலங்காவின் ஏற்றுமதி அபிவிருத்திச் சபையுடன் அண்மையில் நடந்த சந்திப்பின் போது, சிறிலங்காவுக்கான சீனத் தூதுவர் யி ஜியாங்லியாங் இந்த விருப்பத்தை தெரிவித்துள்ளார்.
சீனாவுடனான சிறிலங்காவின் உறவுகளில் மாற்றம் ஏற்படாது என்று, சிறிலங்காவின் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் கபீர் காசிம், உறுதியளித்துள்ளார்.
சீனா தற்போது மைத்திரிபால சிறிசேனவுக்கு உதவி செய்ய முன்வந்துள்ளது. சீனாவுக்கான அவரது பயணத்தைத் தொடர்ந்து, மகிந்த ராஜபக்சவைவை விட மைத்திரிபால சிறிசேன தனக்கு மிகவும் வேண்டியவர் என்பதை சீனா உணர்ந்துள்ளது.
சீனாவினால் மேற்கொள்ளப்பட்ட கொழும்புத் துறைமுக நகரத் திட்டத்தை இடைநிறுத்த சிறிலங்கா அரசாங்கம் உத்தரவிட்ட பின்னரும், சிறிலங்காவுக்கு ஒரு பில்லியன் டொலர் மானியக் கொடைகளை வழங்க சீனா முன்வந்துள்ளதாக, சிறிலங்கா அரசாங்கப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
பிராந்திய விவகாரங்கள் மற்றும் பாதுகாப்புக் கரிசனைகளுக்குத் தீர்வு காண்பதற்கு, இந்தியா, சிறிலங்கா, சீனா ஆகிய நாடுகள் இணைந்து முத்தரப்பு பேச்சுக்களை ஆரம்பிக்க வேண்டும் என்று, சீனா திட்டமொன்றை முன்மொழிந்துள்ளது.