அம்பாந்தோட்டையில் விரைவில் சீனாவின் இராணுவத் தளம் – அமெரிக்க துணை அதிபர் எச்சரிக்கை
கடன் இராஜதந்திரத்தை தனது பூகோள செல்வாக்கை விரிவுபடுத்திக் கொள்வதற்கு சீனா பயன்படுத்திக் கொள்கிறது என்றும், அம்பாந்தோட்டை துறைமுகம், பீஜிங்கின் வளர்ந்து வரும் நீல நீர் கடற்படையின் முன்னரங்க தளமாக விரைவில் மாற்றமடையும் என்றும் அமெரிக்காவின் துணை அதிபர் மைக் பென்ஸ் தெரிவித்துள்ளார்.


