வரும் புதன்கிழமை கலைக்கப்படுகிறது சிறிலங்கா நாடாளுமன்றம்?
சிறிலங்கா நாடாளுமன்றம் வரும் புதன்கிழமை (மே 20ம் நாள்) கலைக்கப்படலாம் என்று அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாகப் பேசப்படுவதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
சிறிலங்கா நாடாளுமன்றம் வரும் புதன்கிழமை (மே 20ம் நாள்) கலைக்கப்படலாம் என்று அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாகப் பேசப்படுவதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில், சிறிலங்காவும் ரஷ்யாவும் இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்திக் கொள்ளும், புதிய உடன்பாடுகள் மற்றும் புரிந்துணர்வு உடன்பாடுகளில் கையெழுத்திடவுள்ளன.
சிறிலங்கா இராணுவத்தின் இரண்டாவது நிலையில் உள்ள பதவியான- இராணுவத் தலைமை அதிகாரி பதவிக்கு, ஆறு பேரின் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
தமிழ்நாடு மீனவரின் படகை கடத்திக் கொண்டு, சிறிலங்காவுக்குத் தப்பிச் செல்ல முயன்ற வடமராட்சி இளைஞர் ஒருவர், தமிழ்நாடு மீனவர்களால் நடுக்கடலில் மடக்கிப் பிடிக்கப்பட்டார்.
பிரித்தானிய நாடாளுமன்றத் தேர்தலில் விடுதலைப் புலிகள் ஆதரவு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவர் தோற்கடிக்கப்பட்டுள்ளதானது, சிறிலங்காவுக்கு நல்ல செய்தி என்று சிறிலங்காவுக்கான கொன்சர்வேட்டிவ் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த அமால் அபேகுணவத்தன தெரிவித்துள்ளார்.
காணாமற்போகச் செய்யப்பட்டவர்கள் தொடர்பான ஐ.நா பணிக்குழு வரும் ஓகஸ்ட் மாதம் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளது. வரும் ஓகஸ்ட் 3ம் நாள் தொடக்கம், 12ம் நாள் வரை இந்தக் குழு சிறிலங்காவில் பயணம் மேற்கொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவின் சொந்த இடத்தில் புதிய விமான நிலையம் ஒன்றை அமைப்பதற்காக சீனா 200 மில்லியன் டொலர்களுக்கும் மேல் வழங்கியிருந்தது. இது சீன அரசாங்கத்தின் சிறந்த முதலீடுகளில் ஒன்றாகக் காணப்படவில்லை.
இந்தியாவின் கேரள மாநிலத்துக்கும், சிறிலங்காவுக்கும் இடையில் சுற்றுலாப் பயணிகள் கப்பல் சேவை விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக, சிறிலங்கா அமைச்சர் காமினி ஜெயவிக்கிரம பெரேரா தெரிவித்துள்ளார்.
கொழும்புத் துறைமுக நகரத் திட்டம் இடைநிறுத்தப்பட்டது இருநாடுகளுக்கும் இடையிலான உறவுகளில் தேவையற்ற இடையூறுகளை ஏற்படுத்தியுள்ளதாக சீனா தெரிவித்துள்ளது.
சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கும், முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கும் இடையிலான பேச்சுக்கள் முடிவுக்கு வந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.