எதிர்க்கட்சித் தலைவர் தெரிவு இன்று இல்லை – கூட்டமைப்புக்கு குழுக்களின் பிரதி தலைவர் பதவி
சிறிலங்காவின் புதிய நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவு இன்று இடம்பெறாது என்று கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
சிறிலங்காவின் புதிய நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவு இன்று இடம்பெறாது என்று கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவரை நியமிக்கும் அதிகாரம் சபாநாயகருக்கே இருப்பதாக ஐதேகவின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா நாடாளுமன்றம் நேற்று நள்ளிரவு கலைக்கப்படும் என்று பரவலாக எதிர்பார்க்கப்பட்ட போதிலும், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன அதற்கான எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.
சிறிலங்கா நாடாளுமன்றம் விரைவில் கலைக்கப்பட வேண்டும் என்று சபாநாயகர் சமல் ராஜபக்ச பரிந்துரை செய்துள்ளார். அரசியலமைப்பு சபைக்கான வெளியக உறுப்பினர்களின் நியமனத்தை உறுதிப்படுத்துவதற்காக இன்று காலை சிறிலங்கா நாடாளுமன்றத்தின் சிறப்பு அமர்வு ஆரம்பமானது.
சிறிலங்கா நாடாளுமன்றத்தில் கடந்த மாதம் 28ம் நாள் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்ட, 19வது திருத்தச்சட்டம் நேற்றுமுதல் நடைமுறைக்கு வந்திருப்பதாக, சிறிலங்கா நாடாளுமன்றத்தின் பிரதி செயலாளர் நாயகம் நீல் இத்தாவெல தெரிவித்துள்ளார்.
சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவுக்கும், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையிலான சந்திப்பு வரும் புதன்கிழமை அல்லது வியாழக்கிழமை சபாநாயகர் சமல் ராஜபக்சவின் இல்லத்தில் நடைபெறவுள்ளது.
சிறிலங்கா நாடாளுமன்றத்துக்குள் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நடத்திய 23 மணிநேரப் போராட்டத்தின் போது, நடந்த சம்பவங்களை, சிலோன் ருடே நாளிதழில், பிரசாத் மஞ்சு எழுதியுள்ள கட்டுரையில் சுவையாக விபரித்துள்ளார். இதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்துள்ளவர் நித்தியபாரதி.
சிறிலங்கா நாடாளுமன்றத்தில் இன்று ஏற்பட்ட அமைதியின்மையை அடுத்து சபை நடவடிக்கைகள், சபாநாயகரால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இன்று காலை நாடாளுமன்றம் கூடியதும், மகிந்த ராஜபக்சவுக்கு ஆரவான நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபை நடவடிக்கையைத் தொடர விடாமல் போராட்டம் நடத்தினர்.
சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவை, அவரது இருப்பிடத்துக்குச் சென்றே விசாரிக்க இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் தலைவர் ஜெகத் பாலபத்தபென்டி இணக்கம் தெரிவித்துள்ளதாக, சிறிலங்காவின் பிரதி சபாநாயகர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார்.
சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவை, விசாரணைக்கு அழைத்த இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் பணிப்பாளர் தில்ருக்சி டயஸ் விக்கிரமசிங்கவை நாடாளுமன்றத்தில் முன்னிலையாகுமாறு, சிறிலங்கா நாடாளுமன்ற சபாநாயகர் அழைப்பாணை விடுத்துள்ளார்.