மேலும்

Tag Archives: ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி

கைது செய்யப்பட்டார் சஜின் வாஸ் குணவர்த்தன

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்த்தன சற்று முன்னர் கைது செய்யப்பட்டுள்ளதாக, சிறிலங்கா காவல்துறைப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்தார்.

மீண்டும் விரைவில் மேடைக்கு வருவேன் என்கிறார் மகிந்த

தாம் விரைவில் சிறிலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மேடைக்கு வரவுள்ளதாகத் தெரிவித்துள்ளார் சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச.

அழைப்பாணை விடுக்க முன்னர் அறிவிக்க வேண்டும் – சபாநாயகர் உத்தரவு

இலஞ்ச மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் வாக்குமூலங்களைப் பெறுவதற்கு, அவர்களுக்கு அழைப்பாணை அனுப்புவதற்கு முன்னதாக,  சபாநாயகருக்கு அறிவிக்கப்பட வேண்டும் என்று, சபாநாயகர் சமல் ராஜபக்ச உத்தரவி்ட்டுள்ளார்.

மகிந்தவிடம் வீட்டுக்குச் சென்றே விசாரணை – ஆணைக்குழு தலைவர் இணக்கம்

சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவை, அவரது இருப்பிடத்துக்குச் சென்றே விசாரிக்க இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் தலைவர் ஜெகத் பாலபத்தபென்டி இணக்கம் தெரிவித்துள்ளதாக, சிறிலங்காவின் பிரதி சபாநாயகர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார்.

மகிந்தவைக் காப்பாற்ற இரவிரவாக நாடாளுமன்றத்துக்குள் தவம் கிடந்த ஆதரவாளர்கள்

இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் விசாரணையில் இருந்து சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவைக் காப்பாற்றுவதற்காக, அவரது ஆதரவாளர்களான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சுமார் 56 நாடாளுமன்ற உறுப்பினர்கள், இரவிரவாக நாடாளுமன்றத்துக்குள் போராட்டம் நடத்தினர்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியையும் கைப்பற்றினார் மைத்திரி

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தலைவராக, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவு செய்யப்பட்டுள்ளார். நேற்றுமாலை நடந்த ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மத்திய குழுக்கூட்டத்தில் இதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

மீண்டும் அரசியலுக்கு வருகிறார் மகிந்த – நுகேகொட கூட்டத்தில் சூளுரை

கடந்த மாதம் அதிபர் தேர்தலில் தோல்வியைச் சந்தித்த சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச மீண்டும் அரசியலுக்குத் திரும்பப் போவதாக சூளுரைத்துள்ளதுடன், இந்த ஆண்டு நடைபெறவுள்ள தேர்தலில் பிரதமர் வேட்பாளராகப் போட்டியிடக் கூடும் என்றும் தெரிவித்துள்ளார்.

ரணிலுக்கு எதிராக மகிந்தவை முன்னிறுத்த நான்கு கட்சிகள் விருப்பம்

நாடாளுமன்றத் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவைப் பிரதமர் வேட்பாளராக நிறுத்துவதற்கு, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் அங்கம் வகிக்கும் நான்கு கட்சிகள் இன்று விருப்பம் வெளியிட்டுள்ளன.

வெலிக்கடைச் சிறையில் மகிந்த ராஜபக்ச

சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச இன்று வெலிக்கடைச் சிறைச்சாலைக்குச் சென்று, நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்கவை சந்தித்து நலன் விசாரித்தார்.

புதிய கட்சி, கூட்டணி அமைக்கும் அழைப்பை நிராகரித்தார் மகிந்த

தாம் புதியதொரு அரசியல் கட்சியை ஆரம்பிக்கவோ அல்லது புதிய அரசியல் கூட்டணி ஒன்றைத் துவங்கவோ போவதில்லை என்று சிறிலங்காவின்  முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.