மேலும்

Tag Archives: உள்ளக விசாரணை

விசாரணைப் பொறிமுறை குறித்து தீவிர ஆலோசனை – சிறிலங்கா அதிகாரி தகவல்

ஐ.நா மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு  அமைய, முன்னெடுக்கப்படவுள்ள உள்ளக விசாரணை  பொறிமுறை கட்டமைப்பு தொடர்பாக  பல்வேறு மட்டங்களில் கலந்துரையாடல்களும் ஆலோசனைகளும் இடம்பெற்று வருவதாக வெளிவிவகார அமைச்சின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

உள்ளகப் பொறிமுறையில் மன்னிப்பும், தண்டனையும் முக்கியம் – என்கிறார் மக்ஸ்வெல் பரணகம

மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பான  விசாரணைப் பொறிமுறையில் மன்னிப்பு மற்றும் தண்டனை ஆகிய இரண்டு அம்சங்களும் இடம்பெற வேண்டும்  என்று காணாமல்போனோர் குறித்து விசாரிக்கும் அதிபர் ஆணைக்குழுவின் தலைவர் மக்ஸ்வெல் பரணகம தெரிவித்துள்ளார்.

மின்சார நாற்காலிக்கும் கலப்பு விசாரணைக்கும் முற்றுப்புள்ளி வைத்து விட்டோம் – சிறிலங்கா அதிபர்

மின்சாரக் நாற்காலிக்கும் கலப்பு விசாரணைக்கும் முற்றுப்புள்ளி வைத்துள்ளதாகவும், ஜெனிவாவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் உள்ளடங்கியுள்ள  உள்ளக விசாரணைப்  பொறிமுறை தொடர்பாக விரைவில் அனைத்துக் கட்சி மாநாட்டை கூட்டி கலந்துரையாடவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன.

ஐ.நா தீர்மானம் சிறிலங்காவில் போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை வழங்காமல் போகலாம்

அனைத்துலக விசாரணையின் மூலம் மட்டுமே பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைப்பது உறுதி செய்யப்படும் எனவும் அமெரிக்கா  வலியுறுத்தியது. ஆனால் தற்போது அமெரிக்கா தனது இந்த நிலைப்பாட்டிலிருந்து சடுதியாக மாறியுள்ளது.

அனைத்துலக விசாரணை, கலப்பு நீதிமன்ற யோசனை நீக்கப்பட்டது சிறிலங்காவின் பெரும் வெற்றியாம்

ஐ. நா. மனித உரிமை பேரவையில்  அமெரிக்கா முன்வைத்துள்ள தீர்மானத்தில் அனைத்துலக  விசாரணை என்ற அழுத்தமும் கலப்பு நீதிமன்ற யோசனையும் தவிர்க்கப்பட்டுள்ளமை  சிறிலங்கா அரசாங்கத்துக்குக் கிடைத்த பெரும் வெற்றி என்று சிறிலங்கா அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

உள்ளக விசாரணையில் வெளிநாட்டு நீதிபதிகள் இடம்பெற்றாலே நீதி கிடைக்கும் – முதலமைச்சர்

சிறிலங்காவில் உள்ளக விசாரணை நடத்தப்பட்டால், வெளிநாட்டு நீதிபதிகளின் பங்களிப்புடனேயே அது இடம்பெற வேண்டும் என்றும், இல்லாவிட்டால் தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்காது என்றும் தெரிவித்துள்ளார் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்.

உள்ளக விசாரணைக்கு ஒத்துழைக்கமாட்டோம் – அமெரிக்க அதிகாரிகளிடம் முதலமைச்சர் தெரிவிப்பு

தமிழின அழிப்பு, போர்க்குற்றங்களுக்கு உள்ளக விசாரணை மூலம் நீதி கிடைக்கும்  என்று நம்பவில்லை. அனைத்துலக விசாரணையே வேண்டும். என்பதே, எமது மக்களின் நிலைப்பாடு என்று அமெரிக்க செனட் உயர் அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்.

வெள்ளைக்கொடி விவகாரம் குறித்து விசாரணை நடத்தப்படும் – ராஜித சேனாரத்ன

வெள்ளைக்கொடி ஏந்தி வந்தவர்கள் கொலை செய்யப்பட்டிருந்தால், அல்லது கடத்தி கொலை செய்திருந்தால் அதுபற்றி உள்ளக விசாரணையில் ஆராயப்படும் என்று சிறிலங்கா அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனரத்ன தெரிவித்தார்.

சிங்கள தேசத்தைக் கட்டியெழுப்ப 61 பௌத்த சிங்கள பேரினவாத அமைப்புடனுடன் மகிந்த உடன்பாடு

சிங்கள தேசத்தைக் கட்டியெழுப்புவதாக வாக்குறுதி அளித்து, சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச 61 சிங்கள, பௌத்த பேரினவாத அமைப்புகளுடன் புரிந்துணர்வு உடன்பாடு ஒன்றில் கையெழுத்திட்டுள்ளார்.

மகிந்தவை மின்சார நாற்காலிக்கு கொண்டு செல்ல முனைகிறது கூட்டமைப்பு – டிலான் பெரேரா

போர்க்குற்றங்களுக்காக மகிந்த ராஜபக்சவைத் தண்டிக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், அனைத்துலக சமூகமும் முயற்சிப்பதாகவும், அவரை மின்சார நாற்காலிக்குக் கொண்டு செல்லும் முயற்சிகள் தீவிரமடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பேச்சாளரான முன்னாள் அமைச்சர் டிலான் பெரேரா.