மேலும்

Tag Archives: அரசியல் கைதி

அரசியல் கைதிகளின் குடும்பத்தினரை வெறும் கையுடன் திருப்பி அனுப்பினார் சிறிலங்கா அதிபர்

சட்டமா அதிபரும், நீதி அமைச்சரும் வெளிநாடு சென்றிருப்பதால், அடுத்தவாரம் நாடு திரும்பிய பின்னர், அரசியல் கைதிகள் விவகாரம் குறித்து அவர்களுடன் கலந்துரையாடுவதாகக் கூறி, அரசியல் கைதிகளின் குடும்பத்தினரையும், தமிழ் அரசியல்பிரமுகர்களையும் சிறிலங்கா அதிபர் வெறும் கையுடன் திருப்பி அனுப்பியுள்ளார்.

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி நாடாளுமன்றில் பிரேரணை

சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை தாமதமின்றி, விடுவிக்க நடவடிக்கை எடுக்கக் கோரி, சிறிலங்கா நாடாளுமன்றத்தில் இன்று ஒத்திவைப்பு வேளை பிரேரணை ஒன்றை எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் சமர்ப்பிக்கவுள்ளார்.

முற்றாக முடங்கியது வடக்கு மாகாணம்

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்கக் கோரி இன்று நடத்தப்பட்ட முழு அடைப்புப் போராட்டத்தினால் வடக்கு மாகாணம் முற்றாக செயலிழந்தது.

தாமதமன்றி அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும்- சிறிலங்கா அதிபருக்கு சம்பந்தன் அவசர கடிதம்

தமிழ் அரசியல் கைதிகளை தாமதமன்றி உடனடியாக  விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி, தமிழ்த் தேசவியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு அவசர கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

பேரம் பேசும் பலம் கூட்டமைப்புக்கு உள்ளதா?

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குப் பேரம் பேசும் பலத்தைக் கொடுங்கள், அதனைக் கொண்டு தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வைப் பெற்றுத் தருவோம் என்று, நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரத்தின் போது, கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கோரியிருந்தார்.

அரசியல் கைதிகளின் விடுதலைக்காய் தொடருந்து முன் பாய்ந்து உயிரை மாய்த்தான் மாணவன்

அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வலியுறுத்தி, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்குக் கடிதம் ஒன்றை எழுதி வைத்து விட்டு, யாழ்ப்பாணத்தில் மாணவன் ஒருவர் தொடருந்து முன் பாய்ந்து உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.

நேற்று பிணை வழங்கப்பட்ட ஒருவர் மட்டுமே விடுவிப்பு – எஞ்சியோர் சிறைக்குள்

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்த 8 தமிழ் அரசியல் கைதிகள் நேற்று பிணையில் செல்ல கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தினால் அனுமதிக்கப்பட்டனர்.

32 அரசியல் கைதிகளுக்கு மீண்டும் விளக்கமறியல் – காற்றில் பறக்கும் சிறிலங்காவின் வாக்குறுதி

இன்று பிணையில் விடுவிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்த 32 தமிழ் அரசியல் கைதிகளும், சட்டமா அதிபர் திணைக்களத்தின் அறிவுறுத்தல் நீதிமன்றத்துக்கு கிடைக்காததால் மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

மீண்டும் வாக்குறுதியை மீறியது சிறிலங்கா அரசு – அரசியல் கைதிகளுக்கு பிணை இல்லை

தீபாவளிக்கு முன்னதாக- முதற்கட்டமாக 32 அரசியல் கைதிகளை பிணையில் விடுவிப்பதாக, வழங்கியிருந்த வாக்குறுதியை சிறிலங்கா அரசாங்கம் காப்பாற்றத் தவறியுள்ளது.

62 அரசியல் கைதிகளை இரண்டு கட்டங்களை விடுவிக்க உயர்மட்டக் கூட்டத்தில் முடிவு

சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள, தமிழ் அரசியல் கைதிகளில் 62 பேரை இரண்டு கட்டங்களாக பிணையில் விடுவிப்பதற்கு சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நேற்று நடந்த உயர்மட்டக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.