வெலிக்கடைக்கும் பரவியது தமிழ் அரசியல் கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டம்
தமிழ் அரசியல் கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டம், வெலிக்கடைச் சிறைச்சாலைக்கும் பரவியுள்ளதாக சிறைக் கைதிகளின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான குழு தெரிவித்துள்ளது.
தமிழ் அரசியல் கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டம், வெலிக்கடைச் சிறைச்சாலைக்கும் பரவியுள்ளதாக சிறைக் கைதிகளின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான குழு தெரிவித்துள்ளது.
கண்டியில் முஸ்லிம்களுக்கு எதிரான இனவாத வன்முறைகளைத் தூண்டி விட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ள, மகாசோன் படையணியின் தலைவர் மற்றும், செயற்பாட்டாளர்களை பொதுபல சேனாவின் பொதுச்செயலர் கலகொடஅத்தேமம ஞானசார தேரர் சந்தித்துள்ளார்.
விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்களான ஏழு பேருக்கு அனுராதபுர சிறப்பு மேல் நீதிமன்றம், தலா 56 ஆண்டுகள் கரூழியச் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மூன்று தமிழ் அரசியல் கைதிகளின் மனுக்களை இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளுமாறு, மேல் முறையீட்டு நீதிமன்றத்திடம் நேற்று அவர்களின் சட்டவாளர் இடையீட்டு மனு ஒன்றின் மூலம், கோரிக்கை விடுத்துள்ளார்.
அனுராதபுர சிறைச்சாலையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் வழக்குகளை அனுராதபுர நீதிமன்றத்தில் இருந்து வவுனியாவுக்கு மாற்றுவதற்கு உதவுமாறு கோரி, முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்கவுக்கு, வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.
நீதிமன்ற விசாரணைகளைத் தவிர்க்கவே, அனுராதபுர சிறைச்சாலையில் மூன்று அரசியல் கைதிகள் உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுப்பதாக, சிறைச்சாலை கண்காணிப்பாளர் அனுராதபுர மேல் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்துள்ளார்.
அனுராதபுர சிறைச்சாலையில் கடந்த ஒரு மாதமாக உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டுள்ள மூன்று தமிழ் அரசியல் கைதிகளும், தமக்கு எதிரான வழக்குகளை மீண்டும் வவுனியா மேல் நீதிமன்றத்துக்கு மாற்ற வேண்டும் எனக் கோரி, மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளனர்.
தமிழ் அரசியல் கைதிகள் அனைவரையும் விடுவிக்கக் கோரி சிறிலங்கா உச்சநீதிமன்றத்துக்கு முன்பாக இன்று கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள மாகாணசபை மற்றும் உள்ளூராட்சித் தேர்தல்களை இலக்கு வைத்து, சிறிலங்கா பொதுஜன முன்னணி தொடர் பேரணிகளை நடத்த முடிவு செய்துள்ளது.
அனுராதபுர சிறைச்சாலையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மூன்று தமிழ் அரசியல் கைதிகளின் கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தியும், அனைத்து அரசியல் கைதிகளையும் உடனடியாக விடுதலை செய்யக் கோரியும், நாளை மறுநாள் – வெள்ளிக்கிழமை- வடக்கு மாகாணத்தில் முழு அடைப்புப் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.