மேலும்

Tag Archives: மனித உரிமைகள்

நீதி வழங்கத் தடையாக இருக்கிறது சட்டமா அதிபர் திணைக்களம்

மோசமான மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைப்பதற்கு சிறிலங்காவின் சட்டமா அதிபர் திணைக்களம் ஒரு பெரிய தடையாக இருப்பதாக, ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க் குறிப்பிட்டுள்ளார்.

ரோம் சட்டத்தில் சிறிலங்கா தற்போது இணையாது

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தை உருவாக்கிய, ரோம் சட்டத்தை சிறிலங்கா, தற்போது அங்கீகரிக்க வாய்ப்பில்லை என்று சிறிலங்கா வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் துஷார ரொட்ரிகோ தெரிவித்துள்ளார்.

உள்ளகப் பொறிமுறையை வலியுறுத்தும் வோல்கர் டர்க்கின் அறிக்கை

பல தசாப்த கால தண்டனை விலக்குரிமையை முடிவுக்குக் கொண்டு வந்து, கடந்த கால மீறல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்க சிறிலங்கா அரசுக்கு ஒரு “வரலாற்று வாய்ப்பு” கிடைத்துள்ளது என்று ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகம்  தெரிவித்துள்ளது.

ஜெனிவாவில் புதிய தீர்மானம் – சிறிலங்கா அரசுக்கு அறிவிப்பு

அடுத்தமாதம் ஜெனிவாவில் ஆரம்பமாகவுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத்தொடரில், சிறிலங்கா தொடர்பான புதிய பிரேரணையை முன்வைக்கவுள்ளதாக கனடாவும், பிரித்தானியாவும் அறிவித்துள்ளன.

தமிழ் மக்களின் கோரிக்கைகள் அடங்கிய கடிதம் ஜெனிவாவுக்கு அனுப்பி வைப்பு

வரும் செப்ரெம்பர் மாதம் நடைபெறவுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவை அமர்வில், சிறிலங்காவின் பொறுப்புக்கூறல் விடயங்கள் தொடர்பாக கவனம் செலுத்தப்பட வேண்டிய விடயங்களை உள்ளடக்கி- தமிழ் மக்களின் கோரிக்கைகள் அடங்கிய கடிதம் ஜெனிவாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

செம்மணியில் மேலும் 5 மனித எலும்புக்கூடுகள் அடையாளம்

யாழ்ப்பாணம்- செம்மணி சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் இருந்து இன்று பதிதாக 5 மனித எலும்புக் கூட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

சோமரத்ன ராஜபக்சவை விசாரிப்பது சிக்கலை ஏற்படுத்துமாம்

கிருஷாந்தி குமாரசாமி படுகொலை வழக்கின் பிரதான குற்றவாளியான சோமரத்ன ராஜபக்சவுக்கு உயர் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ள நிலையில்,  அது குறித்து விசாரணை நடத்துவது சிக்கலை ஏற்படுத்தும் என,  முன்னாள் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர எச்சரித்துள்ளார்.

சிறிலங்கா மனித உரிமைகள் ஆணைக்குழு கடும் எச்சரிக்கை

தனது பரிந்துரைகளை செயற்படுத்தத் தவறும், அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று சிறிலங்கா மனித உரிமைகள் ஆணைக்குழு,   கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

நழுவ விடப்படும் பொறுப்பு

ஐ.நாவுக்கான நிதி ஒதுக்கீட்டை அமெரிக்கா வெட்டியதை அடுத்து, ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகத்தின் முக்கியமான திட்டங்கள், முடங்குகின்ற சூழல் உருவாகியிருக்கிறது.

செம்மணியில் தோண்டும் இடம் எங்கும் மனித எலும்புக்கூடுகள்

யாழ்ப்பாணம்- செம்மணி சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் இருந்து நேற்று வரை 52 எலும்புக்கூட்டுத்தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக மனித உரிமைகள் சட்டத்தரணி ரனித்தா ஞானராஜா தெரிவித்துள்ளார்.