சிறிலங்காவில் எந்த மறைமுக நிகழ்ச்சி நிரலும் கிடையாது – என்கிறது சீனா
சிறிலங்காவில் தமக்கு எந்த மறைமுகமான நிகழ்ச்சி நிரலும் கிடையாது என்று, சிறிலங்காவுக்கான சீனாவின் பிரதித் தூதுவர் ரென் பகியாங் தெரிவித்துள்ளார்.
சிறிலங்காவில் தமக்கு எந்த மறைமுகமான நிகழ்ச்சி நிரலும் கிடையாது என்று, சிறிலங்காவுக்கான சீனாவின் பிரதித் தூதுவர் ரென் பகியாங் தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் உள்ள முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவின் தீவிர ஆதரவாளர்களைக் களையெடுக்கும் அதிரடி நடவடிக்கையில், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இறங்கியுள்ளார்.
ஊவா மாகாண முன்னாள் முதலமைச்சர் சசீந்திர ராஜபக்சவிடம், நிதிக்குற்றச்சாட்டுகள் தொடர்பாக சிறப்பு காவல்துறைக் குழுவினர் இன்று விசாரணை நடத்தியுள்ளனர்.
ரஸ்யாவுக்கான சிறிலங்காவின் தூதுவராக இருந்த உதயங்க வீரதுங்க உக்ரேனிய பிரிவினைவாதப் போராளிகளுக்கு ஆயுதங்களை விற்பனை செய்த குற்றச்சாட்டுத் தொடர்பாக விரைவில் நாடாளுமன்றத்தில் விரிவான அறிக்கை ஒன்றை சமர்ப்பிப்பதாக, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
ரஸ்யாவுக்கான சிறிலங்காவின் முன்னாள் தூதுவரும், சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவின் பெறாமகனுமான உதயங்க வீரதுங்கவின் இராஜதந்திரக் கடவுச்சீட்டு விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
விடுதலைப் புலிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள், மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தினால் ஆபிரிக்காவில் உள்ள தீவிரவாத அமைப்புகளுக்கு விற்பனை செய்யப்பட்டதா என்பது தொடர்பாக விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக சிறிலங்கா அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
சீனா தற்போது மைத்திரிபால சிறிசேனவுக்கு உதவி செய்ய முன்வந்துள்ளது. சீனாவுக்கான அவரது பயணத்தைத் தொடர்ந்து, மகிந்த ராஜபக்சவைவை விட மைத்திரிபால சிறிசேன தனக்கு மிகவும் வேண்டியவர் என்பதை சீனா உணர்ந்துள்ளது.
சிறிலங்காவில் இது தொடர்பாக முன்னர் கேள்வியெழுப்பியிருந்தால் அவர்கள் தண்டிக்கப்படுவர். ஏனெனில் மகிந்த ராஜபக்ச அதிகாரத்துவ ஆட்சியை மேற்கொண்டிருந்தார்.இவர் தேர்தலில் தோற்கடிக்கப்பட்ட பின்னர், மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற பல்வேறு மோசடிகள் தொடர்பில் சிறிலங்கா விழித்துக் கொண்டுள்ளது.
மகிந்த ராஜபக்சவுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எதிராக சுமத்தப்படும் ஊழல், மோசடிக் குற்றச்சாட்டுக்கள் நீதிமன்றில் நிரூபிக்கப்படாவிட்டால், ராஜபக்சவை ஆதரிக்கும் 5.8 மில்லியன் வாக்காளர்களும் அவரை ஒரு அதிகாரத்துவ ஆட்சியாளராக நோக்குவதை விட, ஒரு அரசியல் தியாகியாகவே கருதுவார்கள்.
தன்னைத் தோற்கடித்த வடக்கு, கிழக்கு மக்களைப் பிரிவினைவாதிகள் என்று அறிமுகப்படுத்தி, சிங்கள மக்கள் மத்தியில் அனுதாபம் தேடும் வகையில் சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச பரப்புரையில் ஈடுபட்டுள்ளார்.