மேலும்

Tag Archives: படுகொலை

பிரதி காவல்துறை மா அதிபர் நாலக டி சில்வாவிடம் இன்றும் நாளையும் விசாரணை

சிறிலங்கா அதிபர் மற்றும் முன்னாள் அதிபர் உள்ளிட்டவர்களைப் படுகொலை செய்யத் திட்டமிட்டார் என்று குற்றம்சாட்டப்பட்டுள்ள, பிரதி காவல்துறை மா அதிபர் நாலக டி சில்வாவிடம், இன்றும் நாளையும் மீண்டும் விசாரணை நடத்தப்படவுள்ளது.

ரவிராஜ் படுகொலை வழக்கு – மேல்முறையீட்டு மனுவை விசாரிக்க முடிவு

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் படுகொலை வழக்கில் அளிக்கப்பட்ட தீர்ப்புக்கு எதிராக, தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுவை, மேன்முறையீட்டு நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டுள்ளது.

மில்லியன் கணக்கில் ஏன் செலவிடுகிறார் கோத்தா? – மங்கள கேள்வி

தம்மைக் கைது செய்வதைத் தடுப்பதற்கான நீதிமன்றத்தின் உத்தரவைப் பெறுவதற்காக கோத்தாபய ராஜபக்ச எதற்காக சட்டவாளர்களுக்கு மில்லியன் கணக்கான ரூபாவைச் செலவிடுகிறார் என்று சிறிலங்கா நிதி அமைச்சர் மங்கள சமரவீர கேள்வி எழுப்பியுள்ளார்.

பிரித்தானிய நாடாளுமன்றில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் – நிழல் அமைச்சர்கள் பங்கேற்கின்றனர்

பிரித்தானிய நாடாளுமன்ற வளாகத்தில், இன்று நடைபெறவுள்ள முள்ளிவாய்க்கால் படுகொலைகளின் 9 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வில், தொழிற்கட்சியின் முக்கிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்கவுள்ளனர்.

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு யாழ்ப்பாணத்தில் அஞ்சலி

அனைத்துலக ஊடக சுதந்திர நாளான நேற்று, படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு யாழ்ப்பாணத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் யாழ்ப்பாணத்தில் நினைவுகூரப்பட்டனர்

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களை நினைவு கூரும் வகையிலும், ஊடக சுதந்திரத்தை வலியுறுத்தும் வகையிலும், யாழ்ப்பாணத்தில் நேற்று வேட்கை என்ற நிகழ்வு நடைபெற்றது.

மட்டக்களப்பு: நீதி கோரும் போராட்டமும் சிவராம் நினைவேந்தல் நிகழ்வும்

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் தர்மரட்ணம் சிவராம் (தராகி) அவர்களின் 14 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வும், படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரும் போராட்டமும், மட்டக்களப்பில் நேற்று இடம்பெற்றன.

போர்க்குற்றவாளிகளுக்கு ஒரு எச்சரிக்கை சமிக்ஞை

பிரேசிலுக்கான சிறிலங்கா தூதுவர் ஜெகத் ஜயசூரிய  கடந்த செவ்வாய் அதிகாலை தனது நாட்டிற்குத் திரும்பியுள்ளார். ஏற்கனவே திட்டமிடப்பட்ட நிகழ்ச்சி நிரலுக்கு அமைவாகவே இவர் சிறிலங்காவிற்குத் திரும்பியதாக சிறிலங்கா அரசாங்கம் பின்னர் அறிவித்தது. இவரது தூதுவர் பதவிக் காலம் முடிவடைந்ததாகவும் அறிவிக்கப்பட்டாலும் கூட, ஜெகத் ஜயசூரிய சிறிலங்காவிற்குத் திரும்பி வந்த காலப்பகுதியானது இது தொடர்பில் சந்தேகத்தைத் தோற்றுவித்துள்ளது.

சிறிலங்காவில் நம்பகமான பொறுப்புக்கூறலை வலியுறுத்துகிறார் கனடியப் பிரதமர்

சிறிலங்காவில் பொறுப்புக்கூறல் இடம்பெற வேண்டும் என்று கனேடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடே வலியுறுத்தியுள்ளார். கறுப்பு ஜூலை நினைவுகூரலை முன்னிட்டு வெளியிட்டுள்ள செய்தியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

லண்டன் தாக்குதல்களைக் கண்டிக்கிறது நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்

லண்டன் தொடர் பயங்கரவாதத் தாக்குதல் சம்பவத்தைக் கண்டித்துள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், அரசுகளும், அரசல்லாதோரும் அப்பாவிப் பொதுமக்கள் மீது நடத்தி வரும் வன்செயல்கள் குறித்து, செஞ்சிலுவைச் சங்கத்தின் 1977ம் மாநாட்டினை மீள நடத்துமாறு அழைப்பு விடுத்துள்ளது.