மேலும்

Tag Archives: சி.வி.விக்னேஸ்வரன்

வடக்கு, கிழக்கு அபிவிருத்திக்கான செயலணியின் கூட்டத்தை புறக்கணித்தார் விக்னேஸ்வரன்

வடக்கு, கிழக்கு மாகாணத்தின் அபிவிருத்திச் செயற்பாடுகளை துரிதப்படுத்துவதற்கான செயலணியின் கூட்டம் நேற்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் இடம்பெற்றது.

இந்தியாவின் பங்கை கணிப்பிடுவது கடினம் – முதலமைச்சர்

சிறிலங்காவின் தேசியப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் விடத்தில் இந்தியாவின் வகிபாகம் குறித்து கணிப்பீடு செய்வது மிகவும் கடினமாக உள்ளது என்று தெரிவித்துள்ளார் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்.

வடக்கில் கட்டணமில்லா நோயாளர் காவுவண்டிச் சேவை- ரணில், மோடி ஆரம்பித்து வைப்பு

இந்தியாவின் உதவியுடன் யாழ்ப்பாணத்தில் கட்டணமில்லா அவசர நோயாளர் காவு வண்டிச் சேவை நேற்று இந்திய, சிறிலங்கா பிரதமர்களால் கூட்டாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

ஊடகங்கள் கூறுவது போல வடக்கில் மோசமான நிலை இல்லை – ரஞ்சித் மத்தும பண்டார

ஊடகங்களாலும், அரசியல் எதிரிகளாலும் கூறப்படுவது போன்று, வடக்கில் ஒன்றும் மோசமான நிலை இல்லை என்று, சிறிலங்காவின் சட்டம் ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா இராணுவத்துக்கு தகவல்களை வழங்கக்கூடாது – முதலமைச்சர் உத்தரவு

தமது ஆலோசனையைப் பெறாமல், சிறிலங்கா இராணுவத்தினர் கேட்கும் எந்த தகவலையும் வழங்கக் கூடாது என்று, வட மாகாணசபை அதிகாரிகளுக்கு வடக்கு மாகாண முதலமைச்சர்.சி.வி.விக்னேஸ்வரன் உத்தரவிட்டுள்ளார்.

டெனீஸ்வரன் வழக்கு – உச்சநீதிமன்றத்தை நாடினார் முதலமைச்சர் விக்கி

வட மாகாண போக்குவரத்து, மீன்பிடி அமைச்சர் டெனீஸ்வரன் தொடுத்திருந்த வழக்கில், மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய இடைக்கால உத்தரவுக்கு எதிராக, வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

முதலமைச்சர் வேட்பாளர் குறித்து முடிவு செய்யவில்லை – சிறீதரன்

வடக்கு மாகாண சபைத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா போட்டியிட வேண்டும் என்பதே, தமிழ் அரசுக் கட்சியின் பெரும்பாலான உறுப்பினர்களின் விருப்பம் என்று தெரிவித்துள்ளார், கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன்.

டெனீஸ்வரனை நீக்கிய வடக்கு முதல்வரின் உத்தரவுக்கு நீதிமன்றம் இடைக்காலத் தடை

வடக்கு மாகாண போக்குவரத்து மற்றும் மீன்பிடி அமைச்சர் பதவியில் இருந்து முன்னாள் அமைச்சர் டெனீஸ்வரனை நீக்கிய, வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் உத்தரவுக்குத் இடைக்காலத் தடை விதித்துள்ளது சிறிலங்காவின் மேன்முறையீட்டு நீதிமன்றம்.

வடக்கு முதல்வருக்கு எதிரான வழக்கின் தீர்ப்பு – 29ஆம் நாளுக்கு ஒத்திவைப்பு

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக முன்னாள் அமைச்சர் டெனீஸ்வரன் தாக்கல் செய்திருந்த மனு மீதான தீர்ப்பு, வரும் 29 ஆம் நாள் அளிக்கப்படும் என்று மேன்முறையீட்டு நீதிமன்றம் அறிவித்துள்ளது.

வட மாகாண சபைத் தேர்தலைப் பிற்போட நிபந்தனையுடன் முதலமைச்சர் ஆதரவு

தமது பதவிக்காலத்தை நீடிப்புச் செய்து, வடக்கு மாகாண சபைத் தேர்தல் பிற்போடுவதற்குத் தாம் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.