குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கீழ் தீவிரவாத விசாரணைப் பிரிவு
சிறிலங்கா காவல்துறையின், தீவிரவாத விசாரணைப் பிரிவு, உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.
சிறிலங்கா காவல்துறையின், தீவிரவாத விசாரணைப் பிரிவு, உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.
வன்முறைகளைக் கட்டுப்படுத்த தேவைப்பட்டால் அதிகபட்ச அதிகாரத்தை இராணுவம் பயன்படுத்தும் என்று சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் மகேஸ் சேனநாயக்க எச்சரித்துள்ளார்.
வெளிநாட்டவர்கள் சிறிலங்காவில் வதிவிட நுழைவிசைவைப் பெற்றுக் கொள்வதற்கு, அரச புலனாய்வுச் சேவையின் அனுமதி (Clearance) அவசியம் என்ற நடைமுறையைக் கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது.
பதவியில் இருந்து விலக மறுத்த சிறிலங்கா காவல்துறை மா அதிபர் பூஜித ஜயசுந்தர, கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ளார். காவல்துறை மா அதிபரை கட்டாய விடுமுறையில் செல்லுமாறு சட்டம் ஒழுங்கு அமைச்சு பணித்துள்ளது.
சில வெளிநாட்டுத் தூதுவர்கள் தமது எல்லையை மீறுகிறார்கள் என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன அதிருப்தி வெளியிட்டுள்ளார்.
நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவின் தலைவராக இருந்த மூத்த பிரதி காவல்துறை மா அதிபர் ரவி வைத்யாலங்கார உள்ளிட்ட மூத்த அதிகாரிகள் சிலருக்கு எதிராக குற்றப் புலனாய்வுப் பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
யாழ்ப்பாணத்தில் ஐ.நா அதிகாரி ஒருவர் சிறிலங்கா இராணுவத்தினரால் துப்பாக்கி முனையில் அச்சுறுத்தப்பட்ட சம்பவம் குறித்து, கொழும்பில் உள்ள ஐ.நா அதிகாரிகள் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளனர்.
விடுதலைப் புலிகளின் சீருடையுடன் ஒளிப்படம் எடுத்துக் கொண்ட ஆறு இளைஞர்களை வவுனியாவில் சிறிலங்கா காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
‘எம்மை ஏன் கைவிட்டீர்கள்’ என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவிடம் கேள்வி எழுப்பி, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இன்று முள்ளியவளையில் போராட்டம் நடத்தினர்.
போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைக்கான ஆலோசனைகளை வழங்குவதற்காக, பிலிப்பைன்ஸ் நிபுணர்கள் குழுவொன்று சிறிலங்காவுக்கு வரவுள்ளது.