மேலும்

Tag Archives: ஐ.நா

சித்திரவதைகளுக்கு எதிரான ஐ.நா குழுக் கூட்டத்தில் சிறிலங்கா விவகாரம்

ஜெனிவாவில் அடுத்த வாரம் ஆரம்பமாகவுள்ள சித்திரவதைகளுக்கு எதிரான ஐ.நா குழுவின் கூட்டத்தில் சிறிலங்கா விவகாரமும் மீளாய்வு செய்யப்படவுள்ளது.

ஐ.நாவில் கொடுத்த வாக்குறுதியை சிறிலங்கா காப்பாற்ற வேண்டும் – மனித உரிமைகள் கண்காணிப்பகம்

போர்க்கால மீறல்களுக்குப் பொறுப்புக் கூறும் பொறிமுறையில், வெளிநாட்டு நீதிபதிகள், சட்டவாளர்கள் முக்கிய பங்காற்றுவதை உறுதிப்படுத்துவதாக ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு சிறிலங்கா கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் கோரிக்கை விடுத்துள்ளது.

ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் பயணம் – இன்னமும் முடிவு இல்லை

ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேனின் சிறிலங்கா பயணம் குறித்த காலஅட்டவணை இன்னமும் முடிவு செய்யப்படவில்லை என்று ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகம் தெரிவித்துள்ளது.

பெப்ரவரிக்கு முன் சிறிலங்கா வருவார் ஐ.நா மனித உரிமை ஆணையாளர்

ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன் அடுத்த ஆண்டு பெப்ரவரி மாதத்துக்குள் சிறிலங்காவுக்கான பயணத்தை மேற்கொள்வார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

வேதனை வடியவில்லை வேண்டுமா புத்தாண்டு ?

வெள்ளம் வடிந்தும் வேதனை வடியவில்லை. வெள்ளம் விட்டுச் சென்ற தீப்புண்கள் ஆற தலைமுறைகள் ஆகலாம். சுனாமியின் வடுக்கள் கடலோர மக்களின் மனசில் இன்னும் பச்சைக்காயமாய் நின்று கொண்டிருக்கிறது ; நீரில் மூழ்கிய வாழ்விலிருந்து மீண்டுஎழ ஒரு தலைமுறையோ, இரு தலைமுறையோ எத்தனை காலம் எடுக்குமெனச் சொல்ல முடியாது. – தமிழ்நாட்டில் இருந்து புதினப்பலகைக்காக பா.செயப்பிரகாசம்.

சிறிலங்காவில் சுமுகமான அதிகார மாற்றம் – 2015இன் சாதனை என்கிறார் பான் கீ மூன்

சிறிலங்காவில் கடினமான சூழ்நிலைகளின் மத்தியிலும், சுமுகமான அதிகாரக் கைமாற்றமும் அரசியல் முன்னேற்றங்களும் ஏற்பட்டது ஊக்கமளிப்பதாக உள்ளது என்று ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் தெரிவித்துள்ளார்.

உகண்டா, சீஷெல்சில் உள்ள தூதரகங்களை மூடுகிறது சிறிலங்கா

உகண்டாவிலும்,சீஷெல்சிலும் உள்ள சிறிலங்கா தூதரகங்களை மூடி விட, புதிய அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக அரசாங்க வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

ஆட்கடத்தல்களுக்கு சிறிலங்கா கடற்படை பயன்படுத்திய வான் கைப்பற்றப்பட்டது

மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில், தெகிவளையில் 5 மாணவர்கள் கடத்தப்பட்டது உள்ளிட்ட பல்வேறு ஆட்கடத்தல்களுக்குப் பயன்படுத்தப்பட்ட வான் ஒன்றை, திருகோணமலைக் கடற்படைத் தளத்தில் சிறிலங்காவின் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைப்பற்றியுள்ளனர்.

இரகசியத் தடுப்பு முகாம்கள் குறித்து விசாரிக்கத் தயார் என்கிறது சிறிலங்கா அரசு

இரகசியத் தடுப்பு முகாம் தொடர்பான ஐ.நா குழுவின் குற்றச்சாட்டுத் தொடர்பாக சிறிலங்கா அரசாங்கம் விசாரணை நடத்த தயாராக இருப்பதாக, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் மகேஷினி கொலன்ன தெரிவித்துள்ளார்.

இன்று சிறிலங்கா வருகிறது ஐ.நா குழு – ஒத்துழைக்குமாறு அரசிடம் கோருகிறது மன்னிப்புச்சபை

இன்று சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ள, பலவந்தமாக காணாமற்போகச் செய்யப்பட்டோர் தொடர்பான ஐ.நா பணிக்குழுவுக்கு சிறிலங்கா அரசாங்கம் முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்று, அனைத்துலக மன்னிப்புச் சபை கோரியுள்ளது.