மேலும்

அம்பாந்தோட்டை நோக்கி விரையும் அமெரிக்க கடற்படையின் அதிவேக கப்பல்

அமெரிக்க கடற்படையின் அதிவேகப் போக்குவரத்துக் கப்பலான ‘யுஎஸ்என்எஸ் போல் ரிவர்’ (USNS Fall River) சிறிலங்காவின் அம்பாந்தோட்டைத் துறைமுகத்தை நோக்கிப் பயணத்தை ஆரம்பித்திருக்கிறது.

மாணவர்கள் கடத்திக் கொலை – சிறிலங்கா கடற்படை அதிகாரிகள் இருவர் கைது

கொழும்பில் ஆறு மாணவர்களைக் கடத்தி கப்பம் கோரி, கொலை செய்தார்கள் என்ற குற்றச்சாட்டில், சிறிலங்கா கடற்படை அதிகாரிகள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கனடிய உயர்மட்ட அதிகாரிகள் சிறிலங்காவில் – சம்பந்தனையும் சந்திப்பு

கனடாவின் பூகோள விவகாரங்களுக்கான திணைக்களத்தைச் சேர்ந்த அதிகாரிகள் குழுவொன்று சிறிலங்காவுக்கான பயணத்தை மேற்கொண்டுள்ளது.

அமெரிக்காவே தீர்மானத்தை முன்வைக்கிறது – இணை அனுசரணை வழங்குகிறது சிறிலங்கா

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இம்முறையும் சிறிலங்கா தொடர்பான தீர்மானத்தை அமெரிக்காவே முன்வைக்கவுள்ளதாகவும், இதற்கு சிறிலங்கா இணை அனுசரணை வழங்கும் என்றும் சிறிலங்கா அரசாங்கம் அறிவித்துள்ளது.

வெளிநாட்டு நீதிபதிகளை அழைக்கமாட்டேன் – சிறிலங்கா அதிபர் திட்டவட்ட அறிவிப்பு

மனித உரிமை மீறல்கள் தொடர்பான உள்நாட்டு விசாரணைகளில் வெளிநாட்டு நீதிபதிகளுக்கு இடமளிக்கப்படாது என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன மீண்டும் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க உயர் அதிகாரிகளுடன் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஆலோசனை

அமெரிக்க இராஜாங்கத் திணைக்கள உயர் அதிகாரிகளுடன், சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர ஜெனிவாவில் பேச்சுக்களை நடத்தியிருக்கிறார். 

பிரித்தானியாவுடன் அமெரிக்கா ஜெனிவாவில் பேச்சு – சிறிலங்கா குறித்தும் ஆராய்வு

சிறிலங்கா, உள்ளிட்ட பூகோள மனித உரிமை விவகாரங்களைக் கையாள்வது தொடர்பாக அமெரிக்காவுக்கும், பிரித்தானியாவுக்கும் இடையில் ஜெனிவாவில் உயர்மட்டப் பேச்சுக்கள் நடத்தப்பட்டுள்ளன.

சிறிலங்காவின் புதிய தலைமை நீதியரசராக பதவியேற்றார் பிரியசாத் டெப்

சிறிலங்காவின் புதிய தலைமை நீதியரசராக பிரியசாத் டெப் இன்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவியேற்றுக் கொண்டார். சிறிலங்கா அதிபரில் அதிகாரபூர்வ இல்லத்தில் இன்று காலை இந்த நிகழ்வு இடம்பெற்றது.

சிறிலங்காவுக்கு ஐ.நா அழுத்தம் கொடுக்க வேண்டும் – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

போர்க்குற்றங்கள் தொடர்பாக விசாரணைகளை நடத்தி, மீறல்களில் ஈடுபட்டவர்களை சட்டத்தின் முன் நிறுத்துவதற்கு சிறிலங்காவுக்கு ஐ.நா அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

சிறிலங்கா இராணுவத் தலைமை அதிகாரி மேஜர் ஜெனரல் சன்ன குணதிலக ஓய்வு

சிறிலங்கா இராணுவத் தலைமை அதிகாரி மேஜர் ஜெனரல் சன்ன குணதிலக நேற்றுமுன்தினம் (பெப்ரவரி 28ஆம் நாள்) ஓய்வுபெற்றுள்ளார். இதையடுத்து சிறிலங்கா இராணுவத்தின் இரண்டாவது நிலைப் பதவி வெற்றிடமாகியுள்ளது.