மேலும்

அட்மிரலுக்கு பிணை – கடுமையாக எச்சரித்த நீதிவான்

கொழும்பில் 11 பேர் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட வழக்கில், கைது செய்யப்பட்ட சிறிலங்காவின் பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி, அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன நேற்று பிற்பகல் பிணையில் செல்ல கோட்டு நீதிமன்றினால் அனுமதிக்கப்பட்டார்.

மைத்திரியின் குடியுரிமையும் பறிபோகும் – விஜித ஹேரத்

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன அரசியலமைப்பு மீறல்களை புரிந்துள்ளதால் அவருக்கு எதிராக குற்றவியல் விசாரணைப் பிரேரணையை கொண்டு வர முடியும். அதைவிட அவரது குடியுரிமையையும் பறிக்க முடியும் என்று ஜேவிபி நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

கலைக்கும் அதிகாரம் அதிபருக்கு உள்ளது – சட்டமா அதிபர் வாதம்

நாட்டினதும், ஆயுதப்படைகளினதும் தலைவர் என்ற வகையில் சிறிலங்கா அதிபரின் முடிவுகளுக்கு எதிரான மனுக்களை உச்சநீதிமன்றம் பரிசீலிப்பதற்கு, சட்டமா அதிபர் ஜெயந்த ஜெயசூரிய எதிர்ப்புத் தெரிவித்தார்.

அமைச்சுக்களின் செயலர்களுக்கு சிறிலங்கா அதிபர் உத்தரவிட முடியாது

பிரதமர் மற்றும் அமைச்சரவை என்பன இல்லாத சூழ்நிலையில், தனது அதிகாரத்தின் கீழ் இல்லாத அமைச்சுக்களின் செயலர்களுக்கு, உத்தரவிடுவதற்கு சிறிலங்கா அதிபருக்கு அதிகாரம் கிடையாது என்று- முன்னாள் மேல் நீதிமன்ற நீதிபதியும், ஐதேக நாடாளுமன்ற உறுப்பினருமான ஜே.சி.அலவத்துவல தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தை அவமதித்து விட்டார் சிறிலங்கா அதிபர்

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நாடாளுமன்றத்தை அவமதித்து விட்டார் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல குற்றம்சாட்டியுள்ளார்.

தலைவர் பதவியை விட்டுக்கொடுக்கமாட்டார் ரணில் – என்கிறார் மைத்திரி

ஜனநாயகம் பற்றிப் பேசும் ரணில் விக்கிரமசிங்க முதலில் அதனை தனது கட்சியில் உருவாக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்  சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன.

சிறிலங்கா அதிபருக்கு ரணில் எச்சரிக்கை

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, தொடர்ந்து  அரசியலமைப்பை மீறுவாரேயானால், அவரால் தொடர்ந்தும் அதிபர் பதவியைத் தக்கவைத்துக் கொள்ளாத முடியாத நிலை ஏற்படும் என்று எச்சரித்துள்ளார் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க.

முட்டாள்தனம் செய்து விட்டார் மகிந்த –  கோமின் தயாசிறி

மைத்திரிபால சிறிசேன ஒக்ரோபர் 26 ஆம் நாள் வழங்கிய பிரதமர் பதவியை ஏற்றுக் கொண்டதன் மூலம், மகிந்த ராஜபக்ச பாரிய முட்டாள்தனமான காரியத்தை செய்து விட்டார் என்று ராஜபக்ச விசுவாசியான, சட்டநிபுணர் கோமின் தயாசிறி தெரிவித்துள்ளார்.

ரணிலுக்கு நிபந்தனை விதிப்பது குறித்து கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழு ஆலோசனை

ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்துக்கு ஆதரவு அளிப்பது தொடர்பாக ஆராய்வதற்காக, நேற்று நடந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், இறுதி முடிவு எடுக்கப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

குற்றவியல் பிரேரணை தான் ஒரே வழி – மங்கள சமரவீர

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன மீது குற்றவியல் பிரேரணை கொண்டு வருவது தான்  ஒரே வழி என்று ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.