மேலும்

பிரிவு: செய்திகள்

ரணிலின் பொறியில் இருந்து தப்பிய சீனா – உபுல் ஜோசப் பெர்னான்டோ

சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அண்மையில் சீனாவிற்கு அதிகாரபூர்வ பயணம் மேற்கொண்டமையானது, சிறிலங்கா மீது இந்தியா கோபங்கொண்டிருந்த 1983-1987  காலப்பகுதியில் ஜே.ஆர்.ஜெயவர்த்தனவினால் காமினி திசநாயக்கா இந்தியாவிற்கு அனுப்பப்பட்ட செயலுக்கு ஒப்பானதாகும்.

மகாசங்கத்தை வைத்து மகிந்தவின் குடியுரிமைக்கு ஆப்பு வைக்க முனையும் ஐதேக

ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் மல்வத்தை பீடத்தில் பிளவுகளை ஏற்படுத்த முயற்சிகளை மேற்கொண்ட குற்றச்சாட்டுத் தொடர்பாக, விசாரணை செய்ய ஆணைக்குழு ஒன்றை அமைக்குமாறு, சிறிலங்கா அதிபரைச் சந்தித்துக் கோருவதற்கு ஐதேக அமைச்சர்களின் கூட்டம் ஒன்றில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்தியா – சிறிலங்கா இடையே பாலம் அமைக்கும் திட்டம் இல்லை – சிறிலங்கா அமைச்சர்

இந்தியாவையும் சிறிலங்காவையும் இணைக்கும் பாலத்தை அமைக்கும் திட்டம் எதுவும் கிடையாது என்று சிறிலங்காவின் உயர்கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் காலனித்துவ நாடாக சிறிலங்கா மாறும் – வசந்த பண்டார எச்சரிக்கை

சிறிலங்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையில் பாலம் அமைக்கப்பட்டால், இந்தியாவின் காலனித்துவ நாடாக சிறிலங்கா மாறும் ஆபத்து உள்ளதாக தேசப்பற்று தேசிய இயக்கத்தின் பொதுச்செயலர் கலாநிதி வசந்த பண்டார எச்சரித்துள்ளார்.

“தமிழ்நாட்டுக்கு அடிமைப்பட நேரிடுமோ?” – சிங்கள மக்கள் அச்சம்

எதிர்காலத்தில் தமிழ்நாட்டுக்கு அடிமைப்பட வேண்டிய நிலை ஏற்படுமோ என்று சிங்கள மத்தியில் அச்சம் தலைதூக்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளார், மகிந்த ஆதரவு கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார.

ஐ.நா சிறப்பு நிபுணர் சிறிலங்கா வருகிறார்

சிறுபான்மையின விவகாரங்கள் தொடர்பான ஐ.நாவின் சிறப்பு அறிக்கையாளர் ரிட்டா ஐசக் வரும் ஒக்ரோபர் மாதம் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

மகிந்த ஆதரவாளர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை – சுதந்திரக் கட்சி மத்திய குழு முடிவு

மகிந்த ராஜபக்ச ஆதரவு கூட்டு எதிரணியில் உள்ள சிறிலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதற்கு, அந்தக் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

விடுமுறையைக் கழிக்க வந்த நோர்வே பிரதமர் சிறிலங்கா தலைவர்களைச் சந்திக்கிறார்

விடுமுறையைக் கழிப்பதற்காக சிறிலங்கா வந்துள்ள நோர்வே பிரதமர் எர்ணா சோல்பேர்க், சிறிலங்கா அதிபர், பிரதமர் உள்ளிட்டோரைச் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார்.

யாழ். பல்கலைக்கழகத்தில் சிங்கள மாணவர்களின் பாதுகாப்புக்கு சிறிலங்கா அதிபர் உத்தரவாதம்

யாழ். பல்கலைக்கழகத்தில் சிங்கள மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தியுள்ள சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, எந்த அச்சமோ, சந்தேகமோ இன்றி கல்வியைத் தொடருமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

ஐ.நா பொதுச்சபைக் கூட்டத்தில் உரையாற்றவுள்ளார் சிறிலங்கா அதிபர்

வரும் செப்ரெம்பர் 13ஆம் நாள் ஆரம்பமாகவுள்ள ஐ.நா பொதுச்சபையின் 71ஆவது கூட்டத்தொடரில் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவும் கலந்து கொண்டு உரையாற்றவுள்ளார்.