மேலும்

பிரிவு: செய்திகள்

மகிந்த, உதயங்கவைச் சந்தித்த பிரதியமைச்சரிடம் விளக்கம் கோர அமைச்சரவை கூட்டத்தில் முடிவு

சுற்றுலா மற்றும் கிறிஸ்தவ விவகாரங்களுக்கான பிரதி அமைச்சர் அருந்திக பெர்னான்டோவிடம் விளக்கம் கோருவதற்கு அரசாங்கம் முடிவு செய்திருப்பதாக, சிறிலங்கா அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

இராணுவ நீதிமன்ற விசாரணையில் குற்றவாளியாக காணப்பட்ட பிரிகேடியர் குணவர்த்தன

ரதுபஸ்வெல துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் பிரிகேடியர் தேசப்பிரிய குணவர்த்தனவை குற்றவாளியாக கண்டு, அவரைப் பதவியிறக்கம் செய்யுமாறு இராணுவ நீதிமன்றம் அளித்த பரிந்துரையை சிறிலங்கா இராணுவத் தளபதி நடைமுறைப்படுத்தவில்லை என்பது தெரிய வந்துள்ளது.

முதலமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை – ஆளுனரிடம் கையளிப்பு

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை நேற்றிரவு வடமாகாண ஆளுனர் ரெஜினோல்ட் குரேயிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

முதல்வர் விக்னேஸ்வரனுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை?

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை ஒன்றை ஆளுனர் ரெஜினோல்ட் குரேயிடம் கையளிப்பதற்கான நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இரு அமைச்சர்களை பதவி விலகவும், இருவரை விடுமுறையில் செல்லவும் முதலமைச்சர் உத்தரவு

வடக்கு மாகாணசபையின் கல்வி அமைச்சர் த.குருகுலராசாவையும், விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசனையும், நாளை மதியத்துக்குள் பதவியில் இருந்து விலகுமாறு கோரியுள்ள முதலமைச்சர், ஏனைய இரண்டு அமைச்சர்களையும் விடுமுறையில் செல்லப் பணித்துள்ளார்.

சிறிலங்காவினால் புறக்கணிக்கப்படும் ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் பரிந்துரைகள்

கடந்த மார்ச் மாதம் ஐ.நா மனித உரிமை உயர் ஆணையாளர் செய்ட் ராட் அல் ஹூசேன் சிறிலங்காவால் நிறைவேற்றப்பட வேண்டிய சில முக்கிய பரிந்துரைகளை முன்வைத்திருந்தார். ஆனால் சிறிலங்கா அரசாங்கம் இன்னமும் இப்பரிந்துரைகளை முழுமையாக நிறைவேற்றவில்லை.

நிபுணர்களுடன் இராணுவ விமானத்தை கொழும்புக்கு அனுப்புகிறது அமெரிக்காவின் பசுபிக் கட்டளை பீடம்

சிறிலங்காவில் வெள்ள அனர்தத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மனிதாபிமான உதவிச் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு அமெரிக்காவின் பசுபிக் கட்டளைப் பீடத்தின் இராணுவ விமானம் ஒன்று, நிபுணர்களுடன் கொழும்பு வரவுள்ளது.

பரபரப்பான சூழலில் இன்று கூடுகிறது வடக்கு மாகாணசபை

பரபரப்பான சூழலில் வடக்கு மாகாணசபையின் அமர்வு இன்று காலை இடம்பெறவுள்ளது. அமைச்சர்களுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் குறித்த விசாரிக்க அமைக்கப்பட்ட விசாரணைக் குழுவின் அறிக்கை மற்றும் அதன் பரிந்துரைகள் தொடர்பாக இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்படவுள்ளது.

சிறிலங்கா அரச, பாதுகாப்பு உயர்மட்டங்களுடன் பாகிஸ்தான் கடற்படைத் தளபதி பேச்சு

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் கடற்படைத் தளபதி அட்மிரல் சகாவுல்லா, சிறிலங்கா அதிபர் , பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்  மற்றும் பாதுகாப்புத்துறை உயர் அதிகாரிகளைச் சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

மகிந்தவின் சாரதி கப்டன் திஸ்ஸ கைது

சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவின் முன்னாள் சாரதியான கப்டன் திஸ்ஸ விமலசேன நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இன்று காலை கைது செய்யப்பட்டார்.