மேலும்

பிரிவு: செய்திகள்

காணாமற்போகச் செய்யப்பட்டோர் குறித்த ஐ.நா செயலணிக்குழுவின் சிறிலங்கா பயணம் இடைநிறுத்தம்

காணாமற்போகச் செய்யப்பட்டோர் தொடர்பான ஐ.நா செயலணிக்குழு, வரும் திங்கட்கிழமை சிறிலங்காவுக்கு மேற்கொள்ளவிருந்த பயணம் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.

வசீம் தாஜுதீன் கொலை தொடர்பாக விரைவில் யோசித ராஜபக்சவிடம் விசாரணை

சிறிலங்கா ரக்பி அணி வீரர் வசீம் தாஜுதீன் கொலை தொடர்பாக சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவின் இரண்டாவது மகனும், சிறிலங்கா கடற்படை அதிகாரியுமான லெப். யோசித ராஜபக்சவிடம் விரைவில் விசாரணை நடத்தப்படவுள்ளது.

தேர்தல் பரப்புரைக்கு சீனாவிடம் நிதியுதவி பெறவில்லை – என்கிறார் மகிந்த

தேர்தல் பரப்புரைகளுக்காக சீனாவிடம் இருந்து எந்த நிதியுதவியையும் தாம் பெறவில்லை என்று தெரிவித்துள்ளார் சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச.

சிறிலங்காவில் எல்லாத் தரப்புடனும் ஆலோசித்தே ஐ.நா உதவும் – பான் கீ மூனின் பேச்சாளர்

ஐ.நாவின் எந்த திட்டமும், சிறிலங்கா அரசாங்கம், வடக்கு மாகாணசபை மற்றும் சம்பந்தப்பட்ட எல்லாத் தரப்பினரதும், ஆலோசனையுடனேயே நடைமுறைப்படுத்தப்படும் என்று ஐ.நா பொதுச்செயலரின் பேச்சாளர் ஸ்டீபன் டுஜாரிக் தெரிவித்துள்ளார்.

விக்னேஸ்வரனின் நிலைப்பாடு குறித்து தேர்தலுக்குப் பின்னர் பேசுவோம் – இரா.சம்பந்தன்

சிறிலங்கா நாடாளுமன்றத் தேர்தலில் எந்த வேட்பாளரையும் ஆதரித்து பரப்புரை செய்யப் போவதில்லை என்று, வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் எடுத்துள்ள முடிவு தொடர்பாக, தேர்தல் முடிந்த பின்னர் அவருடன் பேசுவோம் என்று தெரிவித்துள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்.

கொட்டாஞ்சேனை துப்பாக்கிச்சூட்டில் பலியானவர்களின் எண்ணிக்கை 2 ஆக அதிகரிப்பு

கொழும்பில், இன்று நண்பகல் ஐதேகவின் தேர்தல் பரப்புரையார்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இரண்டாக அதிகரித்துள்ளதாக, கொழும்பு தேசிய மருத்துவமனைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொழும்பில் ஐதேக ஆதரவாளர்கள் மீது துப்பாக்கிச் சூடு- ஒருவர் பலி, 12 பேர் காயம்

கொழும்பில் கொட்டாஞ்சேனைப் பகுதியில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட ஐதேக ஆதரவாளர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டதுடன், 12 பேர் காயமடைந்தனர்.

சிறிலங்காவிலும் கொண்டாடப்பட்ட சீன இராணுவத்தின் ஆண்டுவிழா

சீனாவில் மக்கள் விடுதலை இராணுவம் ஆரம்பிக்கப்பட்ட 88 ஆவது ஆண்டு நிறைவு நிகழ்வுகள் சிறிலங்காவிலும் இடம்பெற்றுள்ளன.  கடந்த செவ்வாய்க்கிழமை (28ஆம் நாள்) கொழும்பில் உள்ள கிங்ஸ்பெரி விடுதியில் இந்தக் கொண்டாட்டங்கள் இடம்பெற்றன.

மகிந்த பிரதமராவதால் இந்தியாவுக்கு என்ன பாதகம்?

ராஜபக்ச சிறிலங்காவின் பிரதமராகினாலும் கூட, இவர் அதிபராகப் பதவி வகித்த போது செயற்பட்டது போன்று பலமுள்ள ஒருவராகத் தன்னைக் காண்பிக்க முடியாது.  

ஐ.நா – சிறிலங்கா இடையே இரகசிய இணக்கப்பாடு இல்லை என்கிறார் வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர்

சனல் 4 ஊடகம் குறிப்பிட்டது போல, சிறிலங்கா அரசாங்கத்துக்கும் ஐ.நாவுக்கும் இடையில் இணக்கப்பாடு ஏதும் இருக்கும் என்று தாம் நம்பவில்லை என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் மஹேஷினி கொலன்னே தெரிவித்துள்ளார்.