மேலும்

பிரிவு: செய்திகள்

மகிந்தவுக்கு 102 இராணுவத்தினரே பாதுகாப்பு வழங்குவதாக கூறுகிறார் அவரது பேச்சாளர்

சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்டிருந்த 500 இராணுவத்தினர் விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளதான செய்திகளில் உண்மையில்லை என்று மகிந்த ராஜபக்சவின் ஊடகப் பேச்சாளர் ரொகான் வெலிவிட்ட தெரிவித்துள்ளார்.

மகிந்த – ரணில் இரகசியமாகச் சந்திக்கவில்லையாம்

சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவுக்கும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில், இரகசியச் சந்திப்பு இடம்பெற்றதாக வெளியான தகவல்களை சிறிலங்கா பிரதமர் செயலகம் மறுத்துள்ளது.

சென்னை வெள்ளத்துக்கு பலியானோரின் சடலங்கள் திருகோணமலைக் கடலில் மிதக்கின்றன?

திருகோணமலைக் கடலில் சடலங்கள் மிதப்பதாக மீனவர்கள் வழங்கிய தகவலை அடுத்து, சிறிலங்கா கடற்படையும், காவல்துறையும் இணைந்து நேற்றிரவு முதல் தேடுதல்களை நடத்தி வருகின்றன.

இது வேகத் தடை மட்டுமே – ‘தினமணி’ ஆசிரியர் தலையங்கம்

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற குற்றவாளிகளை விடுதலை செய்வதில் மத்திய அரசுக்கே அதிகாரம் என்று உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு, சென்னையைக் கிழித்துப்போட்ட பேய்மழையில் மூழ்கிப்போனது.

வரவுசெலவுத் திட்டத்துக்கு எதிராக வாக்களிப்போம் – ரெலோ அறிவிப்பு

தமிழ் அரசியல் கைதிகள் விடுவிக்கப்படாவிடின், 2016ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்துக்கு எதிராக வாக்களிக்கப் போவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான ரெலோ அறிவித்துள்ளது.

மோசமான விளைவுகளைச் சந்திக்க வேண்டி வரும் – சிறிலங்காவுக்கு இந்தியா எச்சரிக்கை

பாகிஸ்தானிடம் இருந்து போர் விமானங்களை வாங்க சிறிலங்கா முயற்சிகளை மேற்கொண்டுள்ள நிலையில், அதனைக் கைவிடுமாறு புதுடெல்லியிடம் இருந்து கடுமையான அழுத்தங்கள் கொடுக்கப்படுவதாக கொழும்பு ஆங்கில இதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

போர் விமானங்களை வாங்குவது குறித்து பாகிஸ்தானுடன் பேச்சு – ருவான் விஜேவர்த்தன தகவல்

சிறிலங்கா படைகளை வலுப்படுத்துவதற்கு இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளுடன் பேச்சுக்களை நடத்தி வருவதாக சிறிலங்காவின் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தன தெரிவித்துள்ளார்.

500 இராணுவத்தினரைக் கொண்ட மகிந்தவின் பாதுகாப்பு அணியை விலக்க மைத்திரி உத்தரவு

சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்புக்காக வழங்கப்பட்டிருந்த- 500 இராணுவத்தினரைக் கொண்ட அணியினரை- உடனடியாக விலகிக் கொள்ளுமாறு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார்.

விமானங்களுக்குள் தஞ்சமடைந்த பாம்புகள் – சென்னை விமான நிலையம் திறக்கப்படுவது தாமதம்

பெருவெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள சென்னை நகருக்கான விமான சேவைகள் வரும் 8ஆம் நாள் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக சிறிலங்கன் விமானசேவை அறிவித்துள்ளது.

சந்திரிகாவுக்கும் இலஞ்சம் கொடுக்க முயன்ற அவன்ட் கார்ட் நிறுவனம்

அவன்ட் கார்ட் நிறுவனம் தனக்கும் இலஞ்சம் தர முன்வந்ததாக சிறிலங்காவின் முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.