மேலும்

செய்தியாளர்: திருக்கோணமலைச் செய்தியாளர்

திருகோணமலையில் கி.பி.அரவிந்தன் அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு

மறைந்த கவிஞர் கி.பி.அரவிந்தன் அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு, திருக்கோணமலையில் நேற்று முன்தினம் இடம்பெற்றது. ‘நினைவுகளில் கி.பி.அரவிந்தன்’ என்னும் தலைப்பில்,’நீங்களும் எழுதலாம்’ ஆசிரியர் எஸ்.ஆர்.தனபாலசிங்கம் தலைமையில்  இந்த நிகழ்வு இடம்பெற்றது.

திருகோணமலைத் துறைமுகத்தில் பாகிஸ்தான் போர்க்கப்பல்

பாகிஸ்தான் போர்க்கப்பல் ஒன்று மூன்று நாள் நல்லெண்ணப் பயணமாக திருகோணமலைத் துறைமுகத்தை நேற்று வந்தடைந்துள்ளது.

கிழக்கு அரசியலில் திடீர் திருப்பம் – கல்வி, விவசாய அமைச்சுக்களைப் பெற்றது கூட்டமைப்பு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இரண்டு அமைச்சுப் பதவிகளைப் பெற்றுக் கொண்டு கிழக்கு மாகாண அரசாங்கத்தில் இணைந்து கொண்டதையடுத்து, கிழக்கு மாகாண அரசியலில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.

இராணுவ ஆட்சியில் இருந்து விடுபட்டது திருகோணமலை – சிவில் அரச அதிபர் நியமனம்

திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபரான சிவில் அதிகாரியான என்.ஏ.ஏ.புஸ்பகுமார நேற்று நியமிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து எட்டு ஆண்டுகால இராணுவ ஆட்சியில் இருந்து திருகோணமலை மாவட்டம் விடுபட்டு, நேற்று முதல் சிவில் நிர்வாகம் மீளவும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

கவிழும் நிலையில் கிழக்கு மாகாணசபை – ஆறு உறுப்பினர்கள் ஆதரவை விலக்கினர்

கிழக்கு மாகாணசபையில் ஆட்சியமைக்க சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கு வழங்கிய ஆதரவை, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஆறு உறுப்பினர்கள், இன்று விலக்கிக் கொண்டுள்ளனர்.

கிழக்கு மாகாணசபையில் வரவுசெலவுத் திட்டம் நிறைவேற்றியது – கூட்டமைப்புக்கு 2 அமைச்சர் பதவிகள்?

கிழக்கு மாகாணசபையில் 2015ம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டம் இன்று 34 உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது.

கடற்புலிகள் உருவாக்கிய கடற்கலங்களை ஆச்சரியத்துடன் பார்த்த இந்தியக் கடலோரக் காவல்படை

அண்மையில் திருகோணமலைத் துறைமுகத்துக்குப் பயணம் மேற்கொண்டிருந்த இந்தியக் கடலோரக் காவல்படையினர், விடுதலைப் புலிகளின் கடற்புலிகளால் பயன்படுத்தப்பட்ட கடற்கலங்களை ஆச்சரியத்துடன் பார்வையிட்டுள்ளனர்.

கிழக்கு முதலமைச்சராக ஹபிஸ் நசீர் பதவியேற்பு – அம்பாறையில் கடும் எதிர்ப்பு.

கிழக்கு மாகாணசபையின்  புதிய முதலமைச்சராக சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசை சேர்ந்த ஹபிஸ் நசீர் அகமத் இன்று  மாலை பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.

திருக்கோணமலை மாவட்டம்: தொடரும் மழை, பெரு வெள்ளம் – வாழ்வாதாரமின்றி மக்கள் தவிப்பு

திருக்கோணமலை மாவட்டத்தில் பெய்து வரும் தொடர்ச்சியான மழையினால் திருக்கோணமலையின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. 

வடக்கு, கிழக்கில் ஒருநிறம்; தெற்கில் ஒரு நிறம் – மகிந்தவின் வண்ணஜாலம்

சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச தனது தேர்தல் பரப்புரைகளில் வடக்கு, கிழக்கில் ஒரு உத்தியையும், நாட்டின் பிறபகுதிகளில் இன்னொரு விதமான உத்தியையும் பயன்படுத்தி வருகிறார்.