திருமலை ஆயராகத் திருநிலைப்படுத்தப்பட்டார் வண. அன்ரனி நோயல் இம்மானுவெல் ஆண்டகை
திருகோணமலை மறைமாவட்ட ஆயர் வண. அன்ரனி நோயல் இம்மானுவெல் ஆண்டகையின் திருநிலைப்படுத்தல் நிகழ்வு இன்றுகாலை திருகோணமலையில் இடம்பெற்றது.
திருகோணமலை மறைமாவட்ட ஆயர் வண. அன்ரனி நோயல் இம்மானுவெல் ஆண்டகையின் திருநிலைப்படுத்தல் நிகழ்வு இன்றுகாலை திருகோணமலையில் இடம்பெற்றது.
தமிழரின் இலட்சியத்தை விரைவில் அடைவதற்கு, அடுத்தமாதம் 17ஆம் நாள் நடக்கவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில், தமிழர் தாயகத்தில் உள்ள அனைத்துத் தமிழ்மக்களும் தமது வாக்குகளை ஆயுதமாக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்.
நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 20 ஆசனங்களைப் பெற்றுக் கொண்டால், ஏனைய இனத்தவர்களும், ஆட்சியாளர்களும் சர்வதேசமும் ஏற்றுக்கொள்ளக் கூடியதாக, தமிழ் மக்களின் பிரச்சினைக்குத் தீர்வொன்றைப் பெற்றுக் கொள்ள முடியும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.
கிழக்கில், மட்டுமன்றி வட-கிழக்கிலும் கூட முஸ்லிம் ஒருவரை முதலமைச்சராக ஏற்றுக் கொள்வதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தயாராகவே இருக்கிறது என்று கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
திருகோணமலை மாவட்டத்தில் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்றத் தேர்தலில் களமிறங்கியுள்ளது.
திருகோணமலை மக்கெய்சர் மைதானத்தில் நேற்று மேற்கொள்ளப்பட்ட புதைகுழி அகழ்வின் போது, ஆறு மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதையடுத்து. இதுவரை மீட்கப்பட்ட எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 10ஆக அதிகரித்துள்ளது.
முப்பதாண்டுகால தீவிரவாதத்தை தோற்கடிப்பதில், முக்கிய பங்காற்றிய சிறிலங்கா கடற்படைக்கு, நாட்டின் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதில் முக்கிய பங்கு இருப்பதாக, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
அடுத்த நாடாளுமன்றத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பலத்தை அதிகரிப்பதற்கான வழிமுறைகள் குறித்து, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் நேற்று ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது.
கத்தோலிக்கத் திருச்சபையின் திருகோணமலை மறைமாவட்ட ஆயர் வண. ஜோசப் கிங்ஸ்லி சுவாம்பிள்ளை தனது பதவியை விட்டு விலகியுள்ளார். அவரது பதவி விலகலை பாப்பரசர் பிரான்சிஸ், ஏற்றுக்கொண்டுள்ளதாக, வத்திக்கான் வானொலி தகவல் வெளியிட்டுள்ளது.
சம்பூரில், அண்மையில் மீள்குடியேற்றத்திற்காக விடுவிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட, காணிகளுக்குள் உரிமையாளர்கள் நுழைவதற்குத் தடைவிதித்துள்ள சிறிலங்கா காவல்துறையினர், அங்கு தற்காலிக குடில்களை அமைத்து தங்கியிருந்தவர்களையும், துப்பரவுப் பணியில் ஈடுபட்டிருந்தவர்களையும், வெளியேற்றியுள்ளனர்.