தீர்ப்பு வரும் வரை பொறுத்திருக்க முடிவு
நாடாளுமன்ற கலைப்பு தொடர்பான, உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு அறிவிக்கப்படும் வரையில், எந்த நடவடிக்கையையும் எடுப்பதில்லை என்று சிறிலங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித்துள்ளது.
நாடாளுமன்ற கலைப்பு தொடர்பான, உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு அறிவிக்கப்படும் வரையில், எந்த நடவடிக்கையையும் எடுப்பதில்லை என்று சிறிலங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித்துள்ளது.
சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, நீதித்துறையை அவமதித்துள்ளதாகவும், நீதித்துறை சுதந்திரத்தின் மீது தலையீடு செய்துள்ளதாகவும், உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பிரதமர் மற்றும் அமைச்சர்கள் பணியில் ஈடுபடுவதற்கே மேன்முறையீட்டு நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளதே தவிர, அவர்களை சட்டரீதியற்றவர்கள் என்ற அறிவிக்கவில்லை என, சிறிலங்கா பொதுஜன முன்னணியின் தலைவர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக, முன்னாள் மாகாண அமைச்சர் டெனீஸ்வரன் தாக்கல் செய்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு, எதிர்வரும் ஜனவரி 31ஆம் நாளுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இப்போதைய அரசியல் உறுதியற்ற நிலையை இலகுவாக தீர்க்க முடியும் என்றும், இந்த விவகாரம் நீதிமன்றங்களிடம் இருப்பதால் பொறுமையாக செயற்பட வேண்டியிருப்பதாகவும் சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தைக் கலைக்கும் சிறிலங்கா அதிபரின் அரசிதழ் அறிவிப்புக்கு எதிரான அடிப்படை உரிமை மனுக்கள் மீதான தீர்ப்பு இந்த வாரம் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், மகிந்த ராஜபக்ச தலைமையில் மீண்டும் புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கான மாற்று ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிறிலங்கா சுதந்திரக் கட்சியும், சிறிலங்கா பொதுஜன முன்னணியும் இணைந்து, எதிர்வரும் தேர்தல்களில் போட்டியிடுவது குறித்து பேச்சுக்களை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதிபர் தேர்தலை நடத்துமாறு, ஐக்கிய தேசியக் கட்சி உள்ளிட்ட பல்வேறு தரப்புகள் விடுத்த கோரிக்கையை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நிராகரித்துள்ளார்.
சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் சிறப்பு மாநாட்டுக்குத் தனக்கு அழைப்பு விடப்படவில்லை என்றும், தன்னை ஓரம்கட்டுவதற்கு தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாகவும், சிறிலங்காவின் முன்னாள் அதிபரும், சுதந்திரக் கட்சியின் காப்பாளருமான சந்திரிகா குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
தனக்கு நெருக்கடி கொடுத்தால், அதிபர் பதவியை விட்டு விலகி, பொலன்னறுவவில் உள்ள நிலத்தில் விவசாயம் செய்வதற்குப் போய் விடுவேன் என்று மைத்திரிபால சிறிசேன அச்சுறுத்தினார் என நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.