மேலும்

செய்தியாளர்: கி.தவசீலன்

ஜெனிவாவில் காலவரம்புக்கு உடன்படவில்லை – சரத் அமுனுகம

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கு காலவரம்பு எதற்கும் சிறிலங்கா இணங்கவில்லை என்று எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி சரத் அமுனுகம தெரிவித்துள்ளார்.

இழப்பீடுகளுக்கான பணியகத்துக்கு 3 உறுப்பினர்களின் பெயர்கள் பரிந்துரை

புதிதாக உருவாக்கப்பட்டுள்ள இழப்பீடுகளுக்கான பணியகத்துக்கான உறுப்பினர்களாக நியமிப்பதற்கு மூன்று பேரின் பெயர்களை சிறிலங்கா நாடாளுமன்ற சபாநாயகர் கரு ஜெயசூரிய தலைமையிலான அரசியலமைப்பு பேரவை பரிந்துரை செய்துள்ளது.

சுதந்திரக் கட்சியினர் நால்வருக்கு அமைச்சர் பதவி?

அமைச்சர்களாக நியமிப்பதற்கு சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரது பெயர்களை, ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம், சிறிலங்கா அதிபருக்கு அனுப்பவுள்ளதாக, கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

36 நாடுகளின் சுற்றுலாப் பயணிகளுக்கு கட்டணமில்லா வருகை நுழைவிசைவு

வரும் மே முதலாம் நாள் தொடக்கம் 36 நாடுகளின் சுற்றுலாப் பயணிகளுக்கு, வருகை நுழைவிசைவு, கட்டணமின்றி வழங்கப்படவுள்ளது.

அனைத்துலக விசாரணையை நிராகரித்து இறைமையை பாதுகாத்துள்ளோம் – ரணில்

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்கா அரசாங்கம் அனைத்துலக நீதிபதிகளை உள்ளடக்கிய விசாரணையை ஏற்றுக் கொள்ளவில்லை. இதன் மூலம் தற்போதைய அரசாங்கம்  நாட்டின் இறையாண்மையை பாதுகாத்துள்ளது என்று தெரிவித்துள்ளார் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க.

சிறிலங்காவில் முதல் முறையாக செயற்கை மழை

சிறிலங்காவில் முதல்முறையாக நேற்று செயற்கை முறையில் மழை பெய்யும் திட்டம் வெற்றிகரமாக செயற்படுத்தப்பட்டது.

989 மில்லியன் டொலர் கடன் உடன்பாட்டில் சீனா- சிறிலங்கா கையெழுத்து

மத்திய அதிவேக நெடுஞ்சாலைத் திட்டத்துக்காக, 989 மில்லியன் டொலர் இலகு கடனை வழங்கும் உடன்பாட்டில் சீனாவும் சிறிலங்காவும் கையெழுத்திட்டுள்ளன. சீனாவின் எக்சிம் வங்கியின் மூலம், இந்தக் கடன் வழங்கப்படவுள்ளது.

லிமா -2019 பாதுகாப்பு கண்காட்சியில் சிறிலங்கா கடற்படை

மலேசியாவின் லங்காவி நகரில் நடைபெறவுள்ள அனைத்துலக கடல்சார் மற்றும் வான்வெளி கண்காட்சி (லிமா) – 2019 சிறிலங்கா கடற்படையும் பங்கேற்கவுள்ளது.

தீர்மானத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் – பிரித்தானியா

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட 30/1 மற்றும் 34/1 தீர்மானங்கள், முழுமையாகவும், தெளிவான காலவரம்புக்கு உட்பட்ட வகையிலும், நடைமுறைப்படுத்தப்படுவதற்கான நடவடிக்கைகளுக்கு சிறிலங்கா முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று பிரித்தானியா கோரியுள்ளது.

காலவரம்புடன் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் – ஐரோப்பிய ஒன்றியம்

சிறிலங்கா அரசாங்கம் தனது வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு, காலவரம்புக்குட்பட்ட வகையிலான மூலோபாயத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது.