மேலும்

செய்தியாளர்: கி.தவசீலன்

எந்தக் கட்சியில் போட்டி என்று 24 மணிநேரத்தில் அறிவிக்கிறார் மகிந்த

சிறிலங்காவில் எதிர்வரும் ஓகஸ்ட் 17ஆம் நாள் நடக்கவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் எந்தக் கட்சியில் போட்டியிடுவதென்று இன்னும் 48 மணிநேரத்தில் அறிவிக்கவுள்ளதாக, சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

சுதந்திரக் கட்சித் தலைவர்களுடன் மைத்திரி இன்று முக்கிய கலந்துரையாடல்

சிறிலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தலைவர்கள் இன்று பிற்பகல் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுடன் முக்கிய பேச்சுக்களை நடத்தவுள்ளனர்.

ரணில் – சந்திரிகா இன்று முக்கிய சந்திப்பு

சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும், சிறிலங்காவின் முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்கவுக்கும் இடையில் இன்று முக்கிய சந்திப்பு ஒன்று இடம்பெறவுள்ளது.

மகிந்த எந்த முடிவை எடுத்தாலும் சுதந்திரக் கட்சி உடைவது உறுதி

நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளராகப் போட்டியிட மகிந்த ராஜபக்சவுக்கு வாய்ப்பளிக்கப்பட்டால், சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் பிளவு ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சிறிலங்கா கடற்படைத் தளபதியின் பதவிக்காலம் இன்றுடன் நிறைவு

சிறிலங்கா கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ஜெயந்த பெரேராவின் பதவிக்காலம் இன்றுடன் முடிவடையவுள்ளது. இந்தநிலையில் அவருக்கு சேவை நீடிப்பு வழங்கப்படுமா என்பது தொடர்பாக இதுவரை எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.

யாழ், மட்டு., வன்னி, வேட்பாளர் ஒதுக்கீடு: இரண்டு நாட்களுக்குள் இறுதி முடிவு – செல்வம் அடைக்கலநாதன்

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, வன்னி ஆகிய மாவட்டங்களில் வேட்பாளர்களை நிறுத்துவது தொடர்பான ஆசன ஒதுக்கீடு இன்று அல்லது நாளை முடிவு செய்யப்படவுள்ளது.

உலக அமைதிச் சுட்டி தரவரிசையில் மீண்டும் பின்நோக்கித் தள்ளப்பட்டது சிறிலங்கா

உலக அமைதிச் சுட்டியில் சிறிலங்காவுக்குப் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. 2015ஆம் ஆண்டுக்கான உலக அமைதிச் சுட்டியில், சிறிலங்கா  114ஆவது இடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளது.

ஜூலை 1இல் அதிகாரபூர்வ முடிவை மெதமுலானவில் வைத்து அறிவிக்கிறார் மகிந்த

நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பான தனது அதிகாரபூர்வ நிலைப்பாட்டை சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச வரும் ஜூலை 1ஆம் நாள் அறிவிக்கவுள்ளார். மகிந்த ராஜபக்சவின் பேச்சாளர் ரொகான் வெலிவிட்ட இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

தேர்தலால் இரு கட்டங்களாக உயர்தரத் தேர்வு – ஆசிரியர் சங்கங்கள் கடும் அதிருப்தி

சிறிலங்காவில் எதிர்வரும் ஓகஸ்ட் 17ஆம் நாள் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளதால்,  க.பொ.த உயர்தரத் தேர்வு இரண்டு கட்டங்களாக நடத்தப்படவுள்ளதாக சிறிலங்காவின் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

24 மணி நேரமும் புலனாய்வுத் தகவல்கள் திரட்டப்படுகின்றன – சிறிலங்கா இராணுவப் பேச்சாளர்

நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு எந்த வகையிலும் அச்சுறுத்தல் இல்லை என்று சிறிலங்காவின் இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ஜெயநாத் ஜெயவீர தெரிவித்துள்ளார்.