மேலும்

செய்தியாளர்: கி.தவசீலன்

வடக்கு, கிழக்குக்கு தமிழ் காவல்துறை இணைப்பதிகாரிகள்

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள மக்களுக்கும், சிறிலங்கா காவல்துறைக்கும் இடையிலான உறவுகளை மேம்படுத்தும், சிறிலங்கா அரசாங்கத்தின் நகர்வுகளின் ஒரு பகுதியாக, ஓய்வுபெற்ற மூன்று தமிழ்பேசும் மூத்த காவல்துறை அதிகாரிகள், இணைப்பதிகாரிகளாக நியமிக்கப்படவுள்ளனர்.

சிறிலங்கா கடற்படைத் தளபதிக்கு உயர்மட்டப் பதவி?

சிறிலங்கா கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணவர்த்தனவுக்கு  உயர்மட்டப் பதவி ஒன்று வழங்கப்படவுள்ளதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அமெரிக்காவின் முடிவினால் சிறிலங்காவின் பொருளாதாரத்துக்கு பாதிப்பு

அடுத்த ஆண்டு அமெரிக்கா எடுக்கவுள்ள பொருளாதார முடிவுகளினால் சிறிலங்காவின் பொருளாதாரம் பாதிக்கப்படும் ஆபத்து இருப்பதாக சிறிலங்காவின் அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா அதிபருக்கு ரஷ்ய அதிபர் புடின் அழைப்பு

ரஷ்யாவுக்கு அதிகாரபூர்வ பயணமாக வருகை தரும்படி, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் அழைப்பு விடுத்துள்ளார்.

சீருடையில் இருந்த மாணவனைத் தாக்க முயன்றார் மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன

பாடசாலைச் சீருடையில் இருந்த மாணவன் ஒருவனை, தாக்க முயற்சித்தார் என்று  சிறிலங்கா இராணுவத்தில் இருந்து அண்மையில் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

கடற்படையின் பெயரைக் கெடுக்க அரசாங்கம் முயற்சியா? – மகிந்தவின் குற்றச்சாட்டை மறுக்கும் ருவான்

சிறிலங்கா கடற்படையின் பெயரைக் கெடுப்பதற்காகவே, அம்பாந்தோட்டை துறைமுகப் பணியாளர்களின் போராட்டத்தை குழப்புவதற்கு, கடற்படையை அரசாங்கம் அனுப்பியதாக முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச கூறிய குற்றச்சாட்டை, சிறிலங்கா அரசாங்கம் நிராகரித்துள்ளது.

இந்தியாவுடன் திறந்த வான் உடன்பாட்டில் கையெழுத்திட்டது சிறிலங்கா

இந்தியாவுடன் திறந்த வான் உடன்பாட்டில் (Open Skies Agreement) சிறிலங்கா அரசாங்கம் கையெழுத்திட்டுள்ளது. நாசோவில் நடந்த அனைத்துலக சிவில் விமான பேச்சுக்களில் இந்த உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கப்பல்களை விடுவிக்குமாறு கடற்படைத் தளபதிக்கு உத்தரவிட்டது அரசாங்கமே – சிறிலங்கா பிரதமர்

அம்பாந்தோட்டை துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கப்பல்களை விடுவிக்க சிறிலங்கா கடற்படைக்கு, அரசாங்கமே உத்தரவிட்டது என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

சீனாவுக்கு காணிகளை வழங்குவதற்கு எதிர்ப்பு – அம்பாந்தோட்டையில் வெடிக்கும் போராட்டம்

அம்பாந்தோட்டையில் 15 ஆயிரம் ஏக்கர் காணிகளை சீனாவுக்கு குத்தகைக்கு வழங்கும் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டங்கள் ஆரம்பமாகியுள்ளன.

அம்பாந்தோட்டை சம்பவம் – சிறிலங்கா கடற்படையின் அறிக்கை பாதுகாப்புச் செயலரிடம் கையளிப்பு

அம்பாந்தோட்டை துறைமுகத்தில், கடந்த சனிக்கிழமை ஊடகவியலாளர் ஒருவர் சிறிலங்கா கடற்படைத் தளபதியால் தாக்கப்பட்டதாக குற்றம்சாட்டப்படும் சம்பவம் தொடர்பாக, சிறிலங்கா கடற்படை அறிக்கை ஒன்றை சமர்ப்பித்துள்ளது.