மேலும்

செய்தியாளர்: கி.தவசீலன்

சிறிலங்கா கடற்படைத் தளபதி மீதான குற்றச்சாட்டு – பாதுகாப்பு அமைச்சு விசாரணை

அம்பாந்தோட்டை துறைமுகத்தில் ஊடகவியலாளர் ஒருவரை சிறிலங்கா கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணவர்த்தன தாக்கினார் என்று கூறப்படும் குற்றச்சாட்டுத் தொடர்பாக, சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

அம்பாந்தோட்டை துறைமுகத்தில் பொருட்களை ஏற்றியிறக்கும் சிறிலங்கா கடற்படை

அம்பாந்தோட்டை துறைமுகத்தின் பணியாளர்கள் ஒருவாரமாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், சிறிலங்கா கடற்படையினர், துறைமுகப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

நிலைமாறுகால நீதி, நல்லிணக்கத் திட்டங்களுக்கு 1.7 மில்லியன் டொலரை வழங்குகிறது அமெரிக்கா

சிறிலங்காவில் நிலைமாறுகால நீதி மற்றும், நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் திட்டங்களுக்கு 1.7 மில்லியன் டொலரை வழங்க அமெரிக்கா முன்வந்துள்ளது.

ஐ.நா பொதுச்செயலராகப் பதவியேற்றார் அன்ரனியோ குரெரெஸ்

புதிய ஐ.நா பொதுச்செயலராக, போர்த்துக்கல் நாட்டின் முன்னாள் பிரதமர் அன்ரனியோ குரெரெஸ் (வயது-67) நேற்று முறைப்படி பதவியேற்றுக் கொண்டார். இவர் ஐ.நாவின் ஒன்பதாவது பொதுச்செயலராவார்.

சீனாவுக்கு விற்கப்படும் அம்பாந்தோட்டை துறைமுகம் – இந்தியா கவலை

அம்பாந்தோட்டை துறைமுகம் சீனாவுக்கு விற்கப்படுவது, இந்தியாவுக்கு கவலையளிக்கும் விடயம் என்று இந்தியாவின் முன்னாள் இராஜதந்திரிகளில் ஒருவரான யோகேந்திர குமார் தெரிவித்துள்ளார்.

ட்ரம்பின் அதிரடியை சாதகமாகப் பயன்படுத்த எதிர்பார்க்கும் சிறிலங்கா

அமெரிக்காவில் ஆட்சிக்கு வரவுள்ள புதிய அதிபர் டொனால்ட் ட்ரம்ப், சீனா, மெக்சிகோ ஆகிய நாடுகளுக்கு எதிராக தடைகளை விதிக்கும் வாய்ப்புகள் இருப்பதால், சிறிலங்காவின் ஆடை ஏற்றுமதியாளர்கள் தமக்கு அதிக வாய்ப்புகள் கிடைக்கும் என்று நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

அரசியலமைப்பு மாற்றம் குறித்து மகிந்தவுடன் ரணில், சம்பந்தன் பேச்சு

அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பாக, சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் ஆகியோர், நேற்று சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.

200 சீன இணையர்களுக்கு ஒரே நேரத்தில் சிறிலங்காவில் மாபெரும் திருமணம்

சீனாவைச் சேர்ந்த 200 இணையர்களுக்கு சிறிலங்காவில் ஒரே நேரத்தில் திருமணம் இடம்பெறவுள்ளது. சிறிலங்காவின் சுற்றுலாத்துறை அபிவிருத்தி  அமைச்சர் ஜோன் அமரதுங்க நாடாளுமன்றத்தில் நேற்று இதனை அறிவித்தார்.

அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவுக்கு வழங்குவதற்கான கட்டமைப்பு உடன்பாடு கைச்சாத்து

அம்பாந்தோட்டைத் துறைமுகம் தொடர்பாக சீன நிறுவனத்துக்கும், சிறிலங்கா அரசாங்கத்துக்கும் இடையில், கட்டமைப்பு உடன்பாடு ஒன்று நேற்றுமாலை கையெழுத்திடப்பட்டுள்ளது.

சித்திரவதைகள் குறித்து சிறிலங்கா விசாரிக்க வேண்டும் – ஐ.நா நிபுணர் குழு

சிறிலங்கா படையினர் மற்றும் காவல்துறையினரால், தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருப்போர் மீது தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படும் சித்திரவதைகள் குறித்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று சித்திரவதைகளுக்கு எதிரான ஐ.நா குழு கோரிக்கை விடுத்துள்ளது.