மேலும்

செய்தியாளர்: கி.தவசீலன்

முன்னாள் படை அதிகாரிகளுக்கு சிறிலங்கா அதிபர் வாக்குறுதி

புதிதாக உருவாக்கப்படும் அரசியலமைப்பு தேசிய பாதுகாப்புக்கு விரோதமானதாக இருக்காது என்று, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, உறுதி அளித்துள்ளார்.

அம்பாந்தோட்டை துறைமுகத்தை இராணுவத் தேவைக்கு பயன்படுத்த முடியாது

அம்பாந்தோட்டை துறைமுகம் சிறிலங்கா கடற்படை தவிர்ந்த வேறெந்த கடற்படையினாலும், இராணுவத் தேவைகளுக்காக பயன்படுத்தப்படாது என்று சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.

சிறிலங்காவிடம் அதிருப்தியை வெளியிட்டது சீனா

அம்பாந்தோட்டையில் காணிகளை அபகரிக்க சீனா முனைவதாக, மேற்கொள்ளப்படும் பரப்புரைகள் தொடர்பாக சிறிலங்கா அரசாங்கத்திடம் சீன அரசாங்கம் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஜனவரி 6 முதல் நாளாந்தம் ஏழரை மணிநேரம் மூடப்படுகிறது கட்டுநாயக்க விமான நிலையம்

சிறிலங்காவின் பிரதான அனைத்துலக விமான நிலையமான, பண்டாரநாயக்க அனைத்துலக விமான நிலையத்தின் அனைத்துச் செயற்பாடுகளும், எதிர்வரும் ஜனவரி 6ஆம் நாள் தொடக்கம், காலை 8 மணி தொடக்கம் பிற்பகல் 4.30 மணி வரை மூடப்படவுள்ளது.

மாகாண முதலமைச்சர்களுக்கு கூடுதல் அதிகாரங்களை வழங்குவதற்கு மகிந்த கடும் எதிர்ப்பு

புதிய அரசியலமைப்பின் மூலம், மாகாண முதலமைச்சர்களுக்கு கூடுதல் அதிகாரங்களை வழங்குவதற்கு சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளார்.

திருகோணமலை துறைமுகம் மீதே அமெரிக்காவுக்கு கண் – திஸ்ஸ விதாரண

கடற்படைத்தள விரிவாக்கத் திட்டத்துக்காக திருகோணமலைத் துறைமுகத்தின் மீது அமெரிக்கா கண் வைத்திருப்பதாக, முன்னாள் அமைச்சரும் லங்கா சமசமாசக் கட்சியின் தலைவருமான பேராசிரியர் திஸ்ஸ விதாரண எச்சரித்துள்ளார்.

சீனாவுக்கு விற்கும் திட்டத்துக்கு எதிராக நீதிமன்றத் தடை உத்தரவு பெற வாசுதேவ திட்டம்

அம்பாந்தோட்டை துறைமுகத்தின் 80 வீத உரிமையை சீனாவுக்கு விற்கும் சிறிலங்கா அரசாங்கத்தின் முயற்சிக்கு எதிராக, நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப் போவதாக, நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

சிறிலங்காவின் தேயிலை ஏற்றுமதி – இரண்டு பத்தாண்டுகளில் இல்லாத மோசமான வீழ்ச்சி

சிறிலங்காவின் தேயிலை ஏற்றுமதி கடந்த நொவம்பர் மாதம் பாரிய வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. 1998ஆம் ஆண்டுக்குப் பின்னர் மிகக் குறைந்தளவு தேயிலை கடந்த மாதத்தில் ஏற்றுமதி செய்யப்பட்டிருப்பதாக அதிகாரபூர்வ தரவுகள் தெரிவிக்கின்றன.

சிறிலங்காவின் புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் குறித்து ஐ.நா கவலை

சிறிலங்கா அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ள புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட வரைவின் சில பிரிவுகள் குறித்து ஐ.நா கவலை வெளியிட்டுள்ளது.

பாடசாலை மாணவனைத் தாக்கவில்லை – மறுக்கிறார் மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன

கொழும்பின் முன்னணிப் பாடசாலை ஒன்றின் மாணவனைத் தாம் தாக்கியதாக வெளியான செய்திகளை, சிறிலங்கா இராணுவத்தில் இருந்து ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன நிராகரித்துள்ளார்.