மேலும்

செய்தியாளர்: கி.தவசீலன்

வெளிவிவகார அமைச்சரரை பதவி விலகக் கோரினார் சிறிலங்கா அதிபர்? – மறுக்கிறார் ரவி

சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்கவை, அமைச்சர் பதவியில் இருந்து விலகுமாறு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன கோரியிருப்பதாக கொழும்பு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

வெளிநாட்டு தூதரகம் குழப்பியதா? – விசாரணை நடத்த சிறிலங்கா பிரதமர் உத்தரவு

அம்பாந்தோட்டை துறைமுக உடன்பாடு குறித்து சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நடக்கவிருந்த விவாதம் குழப்பப்பட்டதன் பின்னணியில் வெளிநாட்டு தூதரகம் இருந்ததா என்பது குறித்து விசாரணை நடத்துமாறு சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உத்தரவிட்டுள்ளார்.

எல்லாவற்றுக்கும் புலிகள் மீது பழி போட முடியாது- சிறிலங்கா இராணுவத் தளபதி

வடக்கில் நடக்கும் எல்லா சம்பவங்களுக்கும் விடுதலைப் புலிகளைக் குற்றம்சாட்ட முடியாது என்று சிறிலங்கா இராணுவத் தளபதி லெப். ஜெனரல் மகேஸ் சேனநாயக்க தெரிவித்துள்ளார்.

கேப்பாப்புலவில் இருந்து இராணுவத் தலைமையகத்தை அகற்ற சிறிலங்கா அரசாங்கம் முடிவு?

கேப்பாப்புலவில் இருந்து முல்லைத்தீவு இராணுவத் தலைமையகத்தை அகற்றுவதற்கு சிறிலங்கா அரசாங்கம் முடிவு செய்திருப்பதாக, கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

13 இலங்கையர்களை நாடு கடத்தியது அவுஸ்ரேலியா

அவுஸ்ரேலியாவில் இருந்து நாடுகடத்தப்பட்ட 13 இலங்கையர்கள் நேற்றுக் காலை, கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

மைத்திரி- ரணில் இணைந்து செயற்பட வேண்டும் – சம்பந்தன்

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் நாட்டுக்காக, தொடர்ந்தும் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

சீன கடற்படையின் பாரிய மிதக்கும் மருத்துவமனை சிறிலங்கா வருகிறது

சீன கடற்படையின் மிக நவீனமான மருத்துவமனைக் கப்பலான, ஆர்க் பீ்ஸ்  நல்லெண்ணப் பயணமாக நாளை மறுநாள் சிறிலங்காவுக்கு வரவுள்ளது. இந்தக் கப்பல் எதிர்வரும் 9ஆம் நாள் வரை கொழும்பு துறைமுகத்தில் தரித்து நிற்கும் என்று சீன தூதரகம் அறிவித்துள்ளது.

சிறிலங்கா வெளிவிவகார அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை

சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்றை முன்வைத்துள்ளனர்.

அம்பாந்தோட்டை உடன்பாடு மீதான விவாதத்தை குழப்பிய இராஜதந்திர தூதரகம் – சிறிலங்கா அரசு

அம்பாந்தோட்டை துறைமுக உடன்பாடு தொடர்பாக நாடாளுமன்றத்தில் நடக்கவிருந்த விவாதம் குழப்பப்பட்டதன் பின்னணியில், சக்திவாய்ந்த நாடு ஒன்றின் தூதரகமே இருந்தது என்று சிறிலங்கா அரசாங்கம் குற்றம்சாட்டியுள்ளது.

கிழக்கு கொள்கலன் முனையம் இந்தியாவுக்கு இல்லை – கைவிரித்தது சிறிலங்கா

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் முனையத்தை தனியார் மயப்படுத்தவோ, பொதுத்துறை மற்றும் தனியார்துறை கூட்டுமுயற்சியாக அபிவிருத்தி செய்யவோ போவதில்லை என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.